இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து யாழ். குடாநாட்டில் பரவலாக இந்திய அணியின் ரசிகர்கள் வெடிகொளுத்திக் கொண்டாடினர். யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி என பரவலாக கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இதனைப் பொறுத்துக்கொள்ளாத சிலர் வெள்ளைவான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்றிரவு பரவலாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத் தாக்குதல்காரர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக வெற்றியைக் கொண்டாடியவர்கள் சிதறி யோடி அருகிலிருந்த வீடுகளில் அடைக்கலம் புகுந்து கொண்டதாக எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை அடைக்கலம் கொடுத்த சிலரும் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
03 ஏப்ரல் 2011
ஸ்ரீலங்காவின் தோல்வியை கொண்டாடிய யாழ் மக்கள் மீது தாக்குதல்!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து யாழ். குடாநாட்டில் பரவலாக இந்திய அணியின் ரசிகர்கள் வெடிகொளுத்திக் கொண்டாடினர். யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி என பரவலாக கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இதனைப் பொறுத்துக்கொள்ளாத சிலர் வெள்ளைவான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்றிரவு பரவலாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத் தாக்குதல்காரர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக வெற்றியைக் கொண்டாடியவர்கள் சிதறி யோடி அருகிலிருந்த வீடுகளில் அடைக்கலம் புகுந்து கொண்டதாக எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை அடைக்கலம் கொடுத்த சிலரும் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக