17 ஏப்ரல் 2011

யாழில் அதிகரித்துள்ள காணாமல் போதல் சம்பவங்கள்!

யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 50 மேற்பட்ட காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போதல் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறையினர் ஒப்புக் கொண்ட போதிலும், முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிட மறுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2005 – 2007ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யக் கூடிய இடமில்லாமையினால் இந்த முறைப்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் யாழ்ப்பாண நகரில் ஐந்து பேரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் குறித்து அதிக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை கண்டு பிடிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக