16 ஏப்ரல் 2011

நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரித்த நிபுணர் குழு!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு நிராகரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் தி ஐலண்ட் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கப் படையினர் ஆகிய இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கப்படையினர் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், சரணடைந்த புலிகளை தாக்கியதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்பாவி பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு அரசாங்கம் தடை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக