19 ஏப்ரல் 2011

திரு,நடேசன் அவர்களை புலிகளே சுட்டனராம்!கனகரத்தினத்தின் துரோகத்தனம்.

புலிகளே ப.நடேசனையும் புலித்தேவனையும் சுட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முந் நாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் அவர்கள் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடியோடு சென்று சரணடைந்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களை இலங்கை இராணுவம், பல சித்திரவதைகளுக்கு பின்னர் சுட்டுக்கொண்ற ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் தனது மகனைத் தொடர்புகொண்டு, தான் சரணடையச் செல்வதாகவும், இன்னும் 30 நிமிடங்களில் நான் திரும்பவும் உன்னைத் தொடர்புகொள்ளவில்லை என்றால் எனக்கு உயிராபத்து நேர்ந்ததாக கருதலாம் என்றும் சொல்லியிருந்தார் என்பது பலரும் அறிந்த விடையம்.
ஐ.நா அதிகாரிகள், ரைம்ஸ் ஒன்லைன் மெரியா கெல்வின் போன்ற முக்கிய புள்ளிகளோடு பேசி அவர்கள், அதனை இலங்கை அரசுக்கு தெரியப்படுத்திய பின்னரே புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடையச் சென்றனர். ஆனால் முந் நாள் எம்.பி கனகரட்னம் அவர்கள் புலிகளே நடேசனைக் கொண்றதாகப் பிதற்றியுள்ளார். இறுதி நேரங்களில் இராணுவத்திடம் யார் சரணடையச் சென்றாலும் அவர்களைச் சுட்டுத்தள்ளுமாறு தேசிய தலைவர் கட்டளையிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுமார் 600 பேர்வரை இவ்வாறு கொல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இத் தகவல்களை இவர் இவ்வளவு நாளும் வைத்திருந்து, ஐ.நா அறிக்கை வெளிவரும்போது ஏன் தெரிவிக்கவேண்டும் என்ற சந்தேகங்கள் எழுகின்றது.
அத்தோடு தேசிய தலைவர் அவர்களின் அனுமதியோடே, புலிகளின் அரசியல் மற்றும் மருத்துவப் பிரிவினர் சரணடைய எத்தனித்தனர் என்பது யாவரும் அறிந்தவிடையம். இந்தவேளையில், கனகரடனம் அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பது தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு ஈனச் செயலாக அமைந்திருக்கிறது. போரின்போது, ஒரு தமிழன் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லப்படவில்லை என இவர் ஆங்கில இணையம் ஒன்றிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். ஐ.நா உட்பட, போரை நேடடியாக தான் செயற்க்கைக் கோள் உதவியோடு பார்த்ததாககச் சொல்லும் பல அமைப்புகள், அங்கே அப்பட்டமாக மனித உரிமை மீறல் மற்றும் போர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் கனகரட்னமோ அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனக் கூறுகிறார். தமிழராகிய இவர் முந் நாள் எம்.பி என்பதும், தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற ரீதியில் மட்டுமல்லாது முள்ளிவாய்க்காலிலும் இறுதிவரை நின்றவர் என்ற ரீதியில் அவர் தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் பல பாதிப்புகளைத் தோற்றுவிக்கலாம். இவர் அரசாங்கத்தின் பிடியில் இருந்து, இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகிறாரா இல்லை சுதந்திரமாக வேறு ஒரு நாட்டில் இருந்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளாரா எனத் தெரியவில்லை. மக்கள் யாரவது இது குறித்து அறிந்தால் தெரியப்படுத்தவும். சர்வதேசத்தின் மத்தியில் சிக்கலில் மாட்டியிருக்கும் இலங்கையைக் காப்பாற அபாண்டமான பொய்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார் கனகரட்னம் அவர்கள்.
பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட மக்களின் ரத்தத்துக்கு மேல், ஆயிரம் ஆயிரம் போராளிகள் விடுதலைக்காக குருதி சிந்திய மண்ணிற்குமேல் நின்று பொய் கூறும் இவரைப் போன்றோர் தமிழையும், தமிழ் தாயையும், தாய் நாட்டையும் காட்டிக்கொடுக்கும் கயவர் ஆவர் ! தமிழீழ சரித்திரத்தில் இவர்கள் எப்போதுமே மன்னிக்கப்பட மாட்டார்கள் என்பது உறுதி!
நன்றி:அதிர்வு.கொம்

1 கருத்து:

  1. சிங்களவன் கொடுத்த அடியில் மறைகழன்று விட்டதா? அல்லது சிங்களவனின் கூலிக்கு மாரடிக்கின்றான இந்த கேடு கெட்ட ஈனத் தமிழன். இவர்களைப் போன்றவர்களினால் தான் தமிழருக்கு இன்று இந்த நிலை. புறக்கணக்கப்பட வேண்டியவர்கள்.

    பதிலளிநீக்கு