30 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா அரசு பொய்க்குமேல் பொய் கூறுவதால் தப்பித்து விடமுடியாது.

பொய்க்கு மேல் பொய்களைக்கூறிக்கொண்டு நீண்டகாலம் தப்பிக்க முடியாது. வேண்டுமானால் மஹிந்த தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிங்கள மக்களை அணி திரட்டி மேற்குலகத்திற்கு எதிராக போராடலாம். ஆனால் அது நீண்டகாலத்திற்கு எடுபடாது. இவ்வாறு எகொனொமிஸ்ட் கூறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று விசாரணை ஒன்றினை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது நல்லிணக்க தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொடுப்பது.
மூன்றாவது மிகப்பெரிய பொய்களைகூறி ஒன்றுமே நடக்காதது போல் எதிர்த்து நிற்பது. சிறிலங்கா அரசாங்கமானது மூன்றாவதனையே பற்றிப்பிடித்துள்ளது. போரில் பூச்சிய இழப்பு என்பது மிகப்பெரிய பொய் அதனை வைத்து நீண்டகாலம் பிளைக்க முடியாது. போரில் என்ன நடந்தது என்பதற்கு இலட்சக்கணக்கான பொதுமக்களே சாட்சி. அவர்கள் உள்ளூர் விசாரணைக்குழு முன் தோன்றி தங்கள் கண்ணீர் கதைகளை கூறியுள்ளார்கள்.
இதனைவிட என்ன ஆதாரம் தேவை. சிங்கள அரசாங்கம் மிருகத்தனமாக பொதுமக்களை இலக்குவைத்து தாக்கியுள்ளது. பொதுமக்களைக்கொன்று உள்ளது. பாதுகாப்பு வலையத்தில் மக்கள் எண்ணிக்கையினை குறைத்து பொய் கூறியது. இதெல்லாம் கண்முன் சாட்சி. ஆகவே இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் பொய்களைகூறி தப்பித்துவிடலாம் என நினைப்பது குறுங்கால அரசியல் நோக்கம். இவ்வாறு கூறியுள்ளது எகொனொமிஸ்ட்.

ஸ்ரீலங்காவின் உயரதிகாரிகள் வெளிநாடுகளில் கைதாகும் சாத்தியம்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக இலங்கையின் உயரதிகாரிகளை கைது செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கையின் முக்கிய பிரமுகளை கைது செய்வதற்கு தேவையான பிடிவிராந்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவையானவர்கள் ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கையை ஆதாரம் காட்டி இவ்வாறு பிடிவிராந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் இலங்கைத் தலைவர்களை கைது செய்ய முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் பலர் அமெரிக்கக் குடியுரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும், இராஜதந்திர ரீதியில் சம்பந்தப்பட்ட நாடு இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு உருவாக்கமே சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள விஜயதாச,
இலங்கை அரசாங்கத்தின் எழுத்து மூல கோரிக்கை இன்றி இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடாத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடத்தக் கூடிய சாத்தியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

படுகொலைக்குள்ளான மற்றுமொரு முக்கியஸ்தர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரை சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமைவாக கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.
கேணல் ரமேஸ் இன் படுகொலை தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர் திரு சிவலிங்கம் சுகுணன் (திலக்) என்பவரையும் சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனமாக சிறீலங்காவில் பதிவுசெய்யப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய திலக் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பிரிவுத் தலைவருமாவார். பொருளியல் ஆலோசனை அமைப்பில் பணியாற்றிய உறுப்பினர் ஒருவரே திலக்கின் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார். சடலத்தின் புகைப்படம் சிறீலங்கா இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் காலை 6.15 மணியளவில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட திலக், தான் சாராதரண உடையில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவுள்ளதாக தெரிவித்திருந்தார். சரணடைந்த அவரை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக அடித்துப்படுகொலை செய்துள்ளனர்.
சிறீலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்து தப்பிய திலக்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர் முகாமில் தடுத்துவைக்கப்;பட்டிருந்த முக்கிய நபர்கள் மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரின் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காலம்சென்ற பேராசிரியர் துரைராஜாவின் ஆலோசனையின் அடிப்படையில் தான் பொருளியல் ஆலோசனை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. கேயர், போரம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய இந்த நிறுவனம் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் பெரும் பங்கு வகித்திருந்தது.
அதன் பணிப்பாளராக கடமையாற்றிய சுகுணன் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

29 ஏப்ரல் 2011

உலகிலேயே மிகவும் ஒழுக்கமானவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகளைச் சுதந்திரப் போராளிகள் என்றும் ஒழுக்கமான போராளிகளைக்கொண்ட கட்டமைப்பாக இருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கையை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? இப்படி காடைத்தனத்திற்கு பெயர் பெற்ற சிங்கள அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சிங்கள் அமைச்சர் ஒருவர் பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
நிபுணர் குழுவின் அறிக்கையின் 8ஆம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள், உலகிலேயே மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அறிக்கையை தமது அரசு ஏற்காது என மற்றுமொறு பேட்டியில் பீரிஸ் கூறியுள்ளார்.
மேலும் அறிக்கைய ஏற்காததால் போராட்டங்கள் எதுவும் தீவிரமாக நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் புலனாய்வு அறிக்கையே போராட்டம் நடத்தினால் அரசு நினைக்கும் அளவு வெற்றிபெறாது என தெரிவித்துள்தாலேயே வீரியமான போராட்டங்கள் இல்லையென பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரத்திலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் அரசாங்கம் சர்வசே தரத்திலான விசாரணைகளை நடத்த வேண்டுமென தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு நிகரான வகையில் சர்வதேச தரத்திலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரித கதியில் மேற்கொள்ள முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரங்கள் உள்ளிட்ட தரவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டுமென தெரிவித்துள்ளது.
பிரச்சினைகளுக்கான மூல காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான தமது அமைப்பின் நிலைப்பாட்டை வெளியிடும் நோக்கில் தேசிய சமாதானப் பேரவை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு நிகரான ஓர் கட்டமைப்பு இலங்கையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு ரீதியான பொறிமுறையில் அமைந்த தீர்மானங்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 ஏப்ரல் 2011

நிபுணர் குழு பரிந்துரைகளை ஸ்ரீலங்கா ஏற்று நடக்கவேண்டும்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தாம் ஆதரிப்பதாகவும், சிறீலங்கா அரசு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சகம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. சிறீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் தேவை என பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
எனவே நாம் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கைக்கும் முழுமையான ஆதரவுகளை வழங்குவோம். நீதியான, சுயாதீன விசாரணைகள் தேவை என்பதை அறிக்கை வலியுறுத்தியுள்ளது. சிறீலங்கா அரசு அதனை ஏற்றுக்கொண்டு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகன் ஏற்படுவதற்கு நீதியான விசாரணைகள் அவசியம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேணல் ரமேஸ் அவர்கள் சிங்களப்படைகளால் கொடூரமான முறையில் படுகொலை!

ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரின் ஏற்பாட்டில் சிறீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணியிடம் சரணடடைந்த விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் ரமேஸ் சிறீலங்கா இராணுவத்தால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெற் இணையத்தளம் புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.
ரமேஸ் இடம் சிறீலங்கா இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளும் காணொளிகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் சிறீலங்கா இராணுவத்தினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா (18.08.1964) என ரமேசின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
காணொளியில் சாதாரண உடையில் இருந்த ரமேசிடம் இரணுவ உடைகளை அணுயுமாறு பலவந்தப்படுத்திய சிறீலங்கா படையினர் அதன் பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.
ரமேசிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.
இதனிடையே, விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளாராக கடமையாற்றிய ரமேஸ் என அழைக்கப்படும் இளங்கோவும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் நடேசனுடன் சரணடைந்திருந்தார். ஆனால் அவரின் நிலை என்ன என தெரியவில்லை.
இளங்கோ சரணடைந்ததை சிறீலங்காவின் அதிகாரி பாலிதா கோகன்னா உறுதிப்படுத்தியிருந்தார்.இதே வேளை கேணல் பானு அவர்களுடைய புகழுடல் என நம்பப்படும் ஒரு படமும் நேற்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 ஏப்ரல் 2011

ஐ.நா.அலுவலர்களை ஸ்ரீலங்கா அரசு துப்பாக்கி முனையில் மிரட்டியதா?

போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதப் படுகொலைகள் வெளித்தெரியவராது ஐநா அலுவலர்களை இலங்கை அரசாங்கம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதா என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமைதியாக ஐநா செயலாளர் நாயகம் அளிக்கை செய்த பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் பான் கீ மூனிடம் இரண்டு பிரதானமான கேள்விகளை எழுப்பியது.
பான் அளித்த பதில்களில் தொக்கி நிற்பது என்வென்றால் இலங்கையின் இறுதிப் போரின் போது பாதிக்கப்பட்டவர்கள் படுகொலையானவர்கள் பற்றிய விபரங்களை ஐநா மறைத்துள்ளது என்பது தான்.
பொதுமக்களைப் பாதுகாக்க ஐநா தவறி விட்டது என்றும், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களை திரட்டுவதிலும் வெளியிடுவதிலும் அது தவறிவிட்டது என்றும், நிபுணர் குழு அறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பான் கீ முனிடம் கேட்ட போது அவ்வாறு செயற்பட்டால் 'ஐநா அலுவலர்களின் பாதுகாப்புக்கு தம்மால் உத்தரவாதம் தர முடியாது' என இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
'மோதலின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைப் பெற முடியாதிருந்தது. ஐநாவின் குழுவுக்கு அங்கே எத்தகைய பாதுகாப்பையும் அபாயமற்ற நிலையையும் இலங்கை அரசால் உறுதிப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கத்தால் எங்களுக்குச் சொல்லப்பட்டதாகவே எனக்கு ஞாபகம் இருக்கிறது' என பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
இதனுடைய சாரம் என்னவென்றால் ராஜபக்சக்கள் துப்பாக்கி முனையில் ஐநா அலுவலர்களை வைத்திருந்ததால், அப்போது அங்கு எவ்வளவு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனை ஐநா மறைத்தது. அந்நேரத்தில் தாம் படுகொலை தொடர்பில் கணக்கெடுப்பொன்றைச் செய்து கொண்டிருப்பதாக ஐநாவின் ஊதுகுழல்கள் இன்னர் சிற்றி பிரஸிடம் தெரிவித்திருந்தன. பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் படுகொலைகள் தொடர்பான விபரங்களை வெளியிட்ட போதும் ஐநா அதனை உறுதிப்படுத்த மறுத்து விட்டது.
வெள்ளைக் கொடி விவகாரப் படுகொலையில் விஜய் நம்பியாரின் பங்கு பற்றி இன்னர் சிற்றி பிரஸ் பான் கீ மூனிடம் கேட்ட போது அக்கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்த பான் கீ மூன் ஐநாவின் செயற்பாடுகள் தொடர்பில் தனது சிரேஸ்ட ஆலோசகர்களின் ஆலோசனையுடன் ஒரு மீள்பார்வை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.
கேள்வி என்வென்றால் அந்தச் சிரேஸ்ட ஆலோசகர் விஜய் நம்பியார் தானா? 'அந்நேரத்தில் இலங்கையில் ஐநா தூதுக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பணிகள் தொடர்பாக ஒரு மீள் பார்வை செய்யவுள்ளேன். இது தொடர்பில் நான் எனது சிரேஸ்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாட உள்ளேன்' எனப் பான் கீ மூன் தெரிவித்தருந்தார்.
இலங்கையின் போர்க்குற்ற நிபுணர் குழுவின் அறிக்கையுடன் இணைக்கப் பட்டிருந்த பான் கீ மூனின் கடிதத்தில் விசாரணைக்கான பொறிமுறை சம்பந்தப்பட்ட நாட்டின் ஆதரவுடன் அல்லது உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கியது யார் எனக் கேட்டதுடன் பான் மூன்று முறை நிபுணர் குழு இலங்கைக்குச் செல்லும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இறுதிவரை செல்லவேயில்லையே ஏன் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது.
தனக்கு ஆலோசனை வழங்கியது யார் என்று பான் கீ மூன் சொல்லவில்லை. உறுப்புநாடுகளால் வாக்களிப்பினூடாக மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை தான் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் இலங்கை விஜயத்திற்கு இலங்கை அரசை ஒத்துக்கொள்ள வைக்க நாம் பெரிதும் முயன்றோம். ஆனால் அவர்கள் நிபுணர் குழுவை அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை. இறுதியாக அவர்கள் தமது உயரதிகாரிள் சிலர் நிபுணர்குழுவை வந்து சந்திக்க அனுமதித்தனர். அந்த அடிப்படையில் மோஹபன் பீரிஸ்உடன் சந்திப்பு நடைபெற்றது என்றார்.
இச்சந்திப்புக் குறித்து முன்னர் ஐநா மறுத்து வந்தது. ஆனால் இப்போது ஒத்துக் கொண்டுள்ளது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி தருகின்றது. எனவே அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த மேலதிக சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை இன்று (27) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவில் நடைபெற்ற சமரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை காத்திரமானது.
மூவர் கொண்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல கவலைப்படும் தகவல்கள் உள்ளன. அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
நேரில் கண்டவர்களின் சாட்சியங்களையும், பல காத்திரமான ஆதாரங்களையும் அறிக்கை கொண்டுள்து. எனவே முழுமையான, சுயாதீனமான, காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
அறிக்கையின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு முற்றாக மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுத்தால் அனைத்துலக விசாரணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

26 ஏப்ரல் 2011

படு பயங்கரமான வீடியோ காட்சிகளை சனல் போர் வெளியிடவுள்ளது!

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பிலான புலனாய்வில் இதுவரையில் காட்டப்பட்டவற்றைவிட மிக மிகப் பயங்கரமான வீடியோக் காட்சிகளை சனல் 4தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளதாக ஐக்கிய இராச்சிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் இறுதி வாரங்களில் இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய்வது பற்றி பான் கீ மூன் அறிவித்ததற்கு அடுத்த நாள் சனல் 4 இந்த அறிவிதலை விடுத்துள்ளது. இதன்மூலம் நடந்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோக் காட்சிகள் படு பயங்கரமானவை என்பதால் இவை பின் இரவிலேயே ஒளிபரப்பப்படும். படு பயங்கரமான காட்சிகள் காட்டப்படுமுன் உரிய எச்சரிக்கை வழங்கப்படும் என சனல் 4 அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள கட்சிகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே .சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்தகாலச் சோக வரலாறு எமக்குத் தந்திருக்கும் மிக இறுக்கமான சந்தர்ப்பம் இது. கடந்த காலங்களைப் போலவே இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர்.
நிபுணர் குழு அறிக்கையில் பொது மக்கள் இழப்புக்களுக்கான பிரதான குற்றவாளியாக இலங்கை அரசு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் இந்த விடயத்தில் குற்றவாளிதான். படுகொலைகளை நிறுத்துவதற்கு மத்திய அரசுக்குப் போதிய அழுத்தங்களைக் கொடுக்காத தமிழ்நாடு அரசும் குற்றவாளிதான். இந்தப் பட்டியல் இதனுடன் நின்றுவிடாது.
அது நீளும்போது ஈழத் தமிழர்கள் சிலரும் அதில் சேர்க்கப்படுவார்கள். அதனை நாம் விவரிக்க வேண்டியதில்லை. போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் அமைதியாக இருந்த மேற்கு நாடுகள், எமது மக்கள் நம்பிக்கை இழந்து போய் இருக்கின்ற இன்றைய நிலையில் போர்க் குற்றங்கள் குறித்து உரத்துப் பேசுகின்றன.
எனினும் அதனை நாம் வரவேற்கலாம். இந்த நிலையில் எம் முன்னால் உள்ள கேள்வி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான். தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த விடயத்தில் ஒத்த கருத்துக்கும் அணுகுமுறைக்கும் வரவேண்டும். இதற்கான கோரிக்கையை நாம் பகிரங்கமாக விடுக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு தமிழ் மக்களுடன் அரசியல் ரீதியான உடன்பாட்டுக்கு வருவது நாட்டுக்கும் அரசுக்கும் மக்களுக்கும் நல்லது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணை என்கிறார் பான் கீ மூன்!

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணைகள் நடத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாடு அல்லது உறுப்பு நாடுகளின் இணக்கமின்றி குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்தப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கப்படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

சில படைத் தளபதிகளினால்தான் இன்றைய நிலை என்கிறார் மற்றொரு படைத் தளபதி!

வன்னியில் நடைபெற்ற போரின் போது அனைத்து படைத் தளபதிகளும் போர்தர்மங்களைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டிருக்காது என்று சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிரித்தானிய தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தனது நண்பர்கள் மட்டத்தில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறீலங்கா இராணுவத்தின் 55 மற்றும் 59வது படைப் பிரிவுகளை வழிநடாத்தியிருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, தற்போது பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றுகின்றார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யுத்த காலத்தின் போது நான் வழிநடாத்திய படைப்பிரிவின் எந்தவொரு படைவீரரும் பொதுமக்களின் இலக்குகளைத் தாக்கவில்லை என்பதுடன், யுத்தத்தில் இறந்த விடுதலைப்
புலி உறுப்பினர்களின் உடல்களை போர் தர்மங்களுக்கு ஒப்ப புதைப்பதற்கு நடவடிக்கை எடுந்திருந்தனர்.
மேலும் அவ்வாறு புதைக்கப்பட்ட இடங்களை வரைபடமாக பதிவு செய்து அதனை இராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்திருந்தோம். சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சாதாரண உறுப்பினர்களைக் கூட பாதுகாப்புடன் அழைத்துச் சென்று ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒப்படைத்திருந்தோம்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மட்டுமன்றி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய், தந்தையும் எனது படையணியினரிடம் சரண் அடைந்தவர்களே.
ஆயினும் ஏனைய படைத்தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர் போர் தர்மங்களை மதித்து நடக்காததே இன்றைய சர்வதேச நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்து வரும் நிலையில் சிறீலங்கா அரசு தான் தப்புவதற்காக கட்டளைத் தளபதிகளை பலி கொடுக்கலாம் என்ற அச்சம் சிறீலங்கா இராணுவத்தரப்பினரிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே தான் பிரசன்னா டி சில்வா போன்றவர்கள் தாம் தப்பிக்கவும், பழியை ஏனைய கட்டளைத் தளபதிகள் மீது சுமத்தவும் முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை வெளிவந்துள்ளது.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலேசனைக்குழுவின் அறிக்கையை ஐ.நா முழுமையான வெளியிட்டுள்ளது.
வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கை சிறீலங்கா அரசினதும்இ விடுதலைப்புலிகளினதும் போர்க் குற்றங்கள் என அறியப்பட்டவற்றை அப்படமாகப் பட்டியலிடுகிறது.
அறிக்கையை வெளியிடவேண்டாம் என சிறீலங்கா அரசு மன்றாடியபோதும் அறிக்கை வெளிவந்துள்ளது சிறீலங்காவுக்கு பலத்த பின்னடைவாகவே இருக்கப்போகின்றது.
ஆங்கில அறிக்கையை முழுமையாக பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.
http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf
அறிக்கையின் முக்கிய விடயங்களை தமிழில் பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.
http://www.eelamenews.com/archives/99950

25 ஏப்ரல் 2011

நம்பியாரின் பெயரை தவிர்த்திருக்கும் நிபுணர் குழு!

ஐ.நா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது.
ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஐ.நாவுக்கான நிரந்தரத் தூதுவர் பாலித கோகண ஆகியோருடைய பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஐ.நா நிபுணர் குழுவின் விபரிப்பின்படி நடேசன்,புலித்தேவன் மற்றும் கேர்ணல் ரமேஸ் ஆகியோர் சரணடைவதற்கான கோரிக்கையை ஐ.நா அலுவலருக்கு அனுப்பி உள்ளனர். இதன் விளைவாக சரணடைந்தால் அவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவர்களுக்கு இவ்விடயத்தில் தொடர்பாளர்களாகச் செயற்பட்டவர்களால் வழங்கப்பட்டது. எனினும்; அவர்கள் சரணடைந்ததன் பின்னர் கொல்லப்பட்டார்கள்.
எனினும் நிபுணர் குழு இதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஐ.நா அலுவலரான விஜய் நம்பியாரின் பெயரை குறிப்பிடவில்லை.
பதிலாக இதில் சம்பந்தப்பட்ட ஐ.நா அலுவலர் ஒருவர் சரணடைபவர்கள் கொல்லப்பட மாட்டார்களய் என்ற உறுதி மொழியை வழங்கியிருந்தார் என்றே குறிப்பிட்டிருக்கிறது. நம்பியார் தான் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்.
2009இல் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இன்னர் சிற்றி பிரஸ் தொடர்ந்து பலமுறை திரும்பத் திரும்ப நம்பியாரின் பாத்திரம் இதில் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. நம்பியார் தான் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறி ஒரு சிறிய நேர்காணலையும் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கொடுத்திருந்தார். ஆனால் நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது.
இவ்வகையில் இந்நிபுணர் குழு அறிக்கை தனிப்பட்ட நலன்கள் சார்ந்ததாக இருப்பது தெளிவாகிறது.
இவ்வாறு அஜாக்கிரதைத் தனத்துடன் அறிக்கையை வெளியிட அனுமதித்த பான் கீ மூனும் ஐ.நாவும் அடுத்து என்ன செய்யக் கூடும்? அதுவும் இவ்வாறான தனிப்பட்ட நலன்கள் ஊடுருவியிருக்கும் போது?

பொது மக்கள் இழப்புக்களை ஐ.நாவால் தடுத்திருக்க முடியும்!

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐநா தவிர்த்திருக்க முடியுமென ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருக்க வேண்டுமென, இலங்கைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் கொழும்பில் ஐநா தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் இறுதி ஐந்து மாதக் காலப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையென சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் அடிக்கடி வாக்குறுதிகளை அளித்த போதிலும் பெருமளவிலான பொதுமக்கள் அரச படைகளின் ஷெல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா நிபுணர் குழு கண்டறிந்துள்ளதாகவும் கோர்டன் வைஸ் பிபிசி சிங்கள சேவையான சந்தேஷயவிடம் கூறினார்.
பொதுமக்களின் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை ஐநா எடுக்க முற்பட்ட போதெல்லாம் இலங்கை அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா அறிந்திருந்தது
விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசாங்கமும் இருந்ததால், பொதுமக்கள் உயிரிழப்புகளை அது கண்டு கொள்ளவில்லையெனவும் ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்தார்.
போர்ப்பிரதேசத்தில் பொதுமக்கள் இருந்த வலயத்துக்குள்ளிருந்தும் இந்தியாவுக்கு பலமான புலனாய்வு வசதிகள் இருந்துள்ளன என்பதும் கோர்டன் வைஸின் கருத்து.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்தனர் எனவும் கூறும் ஐநாவின் கொழும்புத் தலைமையக முன்னாள் பேச்சாளர், அவர்கள் பின்னர் கொல்லப்பட்டுவிட்டதாக குற்றஞ் சாட்டப்படுவதாகவும் பிபிசியிடம் கூறினார்.
இலங்கை இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக கண்டறிந்துள்ள ஐநா தலைமைச் செயலரின் ஆலோசனைக்கான நிபுணர குழு, அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கத்தின் மீதும் வடுதலைப் புலிகளின் மீதும் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொகான் பீரிசை தடுமாறவைத்த அமெரிக்க தூதர்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் நடத்திய விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறீலங்கா நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீஸ் இற்கும் கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீசிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மோஹான் பீரீஸ் ஐ.நாவின் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவே விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்தால் விசனமடைந்த அமெரிக்கத் தூதுவர் சரமாரியாக பல கேள்விகளை தொடுத்ததால் நிலை தடுமாறிய பீரீஸ் ஒரு அடி நகர்ந்துபோய் மலைத்து நின்றதாக கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தன்னை சுதாகரித்துக்கொண்ட பீரீஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டில் சிறீலங்கா அரசு தலையிடாது என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த உறுதிமொழிகளை சிறீலங்கா அரசு காப்பாற்றுமா? என்பது தான் முதன்மையான கேள்வியாக உள்ளது.

24 ஏப்ரல் 2011

அராலியில் ஈ.பி.டி.பி.ஆதரவுடன் கள்ளுத்தவறணை.

எங்களை வெட்டிக் கொன்றாலும் பரவாயில்லை.உங்கள் அடாவடித்தனம் ஈடேற இடம் கொடோம் என்னும் கோஷத்தோடு, ஈ.பி.டி.பி யினரின் ஆதரவுடன் அடாவடித்தனமாகத் தவறணை ஒன்றை அமைக்கும் சமூகவிரோதச் செயலுக்கு எதிராக அராலி மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
அராலி மத்தி, ஊரத்தி என்னும் இடத்தில் முன்பள்ளி, 3 ஆலயங்கள், பொதுநோக்கு மண்டபம் என்பன அமைந்துள்ள கேந்திர இடத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் துணையோடு கள்ளுத்தவறணை ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த இடம் ஆலயங்கள் மற்றும் கல்விச்சாலை என்பன அமைந்துள்ள இடம் என்பதாலும், பொதுமக்களுக்கு இங்கு தவறணை அமைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படும் என்பதாலும் இத்தவறணையை கடற்கரையை அண்டிய பகுதியில் அமைக்குமாறு ஊர்மக்கள் கோரினர். இது குறித்து கிராம சேவையாளர், பிரதேச செயலர் ,அரச அதிபர் ஆகியோருக்கும் அவர்கள் முறையிட்டனர்.
அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத ஈ.பி.டி.பியினர் அவ்விடத்திலேயே தவறணை அமைப்பது என்ற முடிவில் விடாப்பிடியாக நின்று , கட்டடம் கட்டுவதற்காக கற்களையும் குறித்த காணியினுள் கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்களின் அச்செயலுக்கு மக்கள் ஒன்றுதிரண்டு தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தம்மை எதிர்த்தால் அவர்கள் தேவையற்ற விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என ஈ.பி.டி.பியினர் அச்சுறுத்தினர். எனினும் " எம்மை நீங்கள் வெட்டிக் கொன்றாலும் பரவாயில்லை. உங்கள் அடாவடித்தனத்தால் எங்கள் கிராமம் அழிந்துபோக விடமாட்டோம்� என ஊர் மக்கள் தம் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து, அவ்விடத்துக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விரைந்து சென்று மக்களின் பிரச்சினை குறித்துக் கேட்டறிந்தார்.பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய சரவணபவன் எம்.பி தென்னிலங்கையில் ஒரு இடத்தில் இவ்வாறு மதுபான நிலையம் ஒன்றை அமைக்க முடியுமா? ஆனால் இங்கு 3 ஆலயங்கள் இருக்கும் புனிதமான இடத்தில் தவறணை அமைக்க ஒரு கட்சி கங்கணம் கட்டுகிறது. ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி நிகழும் இந்த அராஜகத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் மக்களின் போராட்டத்துக்கு இறுதிவரை நான் துணையிருப்பேன் என்று உறுதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிடம் அறிக்கையை கையளித்தது ஸ்ரீலங்கா!

ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கையை வாசித்து அதில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு சிறீலங்கா அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அறிக்கையையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஆய்வு செய்வதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் குழு ஒன்றை இந்தியா அமைத்துள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தா அறிக்கை தொடர்பில் கலந்துரையாடியதுடன், அதனை இந்திய அரசுக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.

23 ஏப்ரல் 2011

மகிந்தவின் பெயர் நீக்கத்தால் துன்பப்படுகிறது ஜாதிக ஹெல உறுமய!

உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலிலிருந்து ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் குழாம் விளக்கமளிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி வலியுறுத்தியுள்ளது.
இணைய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் முதல் பத்து நிலைகளில் இடம்பிடித்திருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் சூழ்ச்சி இருக்கலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இணைய கருத்துக் கணிப்பின் போது ஜனாதிபதி நான்காம் நிலையில் காணப்பட்டதாகவும், இதனையிட்டு இலங்கையர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டது என்பது தொடர்பில் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழாம் விளக்கமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில மேற்குலக நாடுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டமையின் பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தேவைக்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை என்கிறார் கோத்தபாய!

நான் நினைத்ததை செய்பவன்; எவரும் கருத்துக் கூறும்வரைப் பார்த்துக்கொண்டிருப்பவன் அல்ல என பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இரிதா லங்கா பத்திரிகையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.செயலர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர் நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் உள்ள எவரும் பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிராக எதனையும் செய்ய முடியும். நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளின் தேவைக்கு அமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை.யுத்தகாலத்தில் கூட விசேட பொறுப்புடன் செயற்பட்ட நாடு இலங்கை.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என அண்மையில் ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.பிரபாகரனின் தேவைதான் அறிக்கையில் உள்ளது. இலங்கையை அடிப்படைவாத பெளத்த நாடாக மாற்றப்போவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அத்துடன் விடுதலைப் புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.இதேவேளை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி.யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் பொறுப்பாளர் கே.பியை கடும் சிரமத்தின் மத்தியில் பிடித்து கைது செய்து,தடுப்புக்காவல் உத்தரவின் பெயரில் தடுத்து வைத்துள்ளோம்.அவ்வாறான ஒருவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என இலங்கை விடுத்த வேண்டுகோளை ஐ.நா நிராகரித்துள்ளது. 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா அதிகாரிகளால் அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை துணை நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அறிக்கையின் பிரதிகள் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தவிர ஐ.நாவுடன் சம்பந்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கும், போத்துக்கல் தூதுவருக்கும் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்பட்டிருந்தன. நிபுணர்கள் குழுவின் அறிக்கை நேற்று வெளியிடப்படவிருந்த போதிலும் பெரிய வெள்ளி என்பதால், அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்காவின் கோரிக்கையை நிராகரித்து,அறிக்கையை வெளியிட உள்ளது ஐ.நா.

ஐ.நா.நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், அதனை தாம் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாது முழுமையாக வெளியிட எண்ணியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரது பதில் பிரதி ஊடகப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான ஸ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டை, குறித்த அறிக்கையில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ-மூனின் நிபுணர் குழு அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதனால் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக தாம் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க போதில்லை என அவர் உறுதியளித்துள்ளார்.

வன்னியில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வரும் சிங்களப்படைகள்!

சிறீலங்காவில் போர் நிறைவுபெற்று இரு வருடங்கள் அண்மிக்கும் நிலையிலும் வன்னியில் மீள்குடியேறிய மக்கள் இராணுவ வலையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தொடர்ந்தும் இராணுவத்தினர் இளம் தமிழ் பெண்களை கூட்டமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திவருவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் 4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அதன் செய்தித் தொகுப்பில் அண்மையில் வன்னி சென்று திரும்பிய அதன் ஊடகவியலாளர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வன்னியில் போர் நிறைவடைந்த பின்னரும் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன. போரில் தப்பியவர்களே அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர்.
அங்கு சென்ற எமது ஊடகவியலாளர் சில தகவல்களை படம் பிடித்தும் வந்துள்ளார். ஆனால் அவை சிறீலங்கா இராணுவத்தினருக்கு தெரியாது திரட்டப்பட்ட தகவல்கள், அவர்களின் கையில் அவை கிடைத்திருந்தால் தண்டனையின் அளவு விபரீதமாக இருந்திருக்கும்;.
வன்னியில் கிராமம், கிராமமாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்திவருகின்றனர். மக்கள் தமது வாழ்வுக்கு வேறு இடங்களை தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சிப் பகுதியில் 57 ஆவது படையணியின் தலைமையகம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இராணுவத்தனரையே காணமுடிந்துள்ளது.
தனது வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஏதுவுமற்ற ஒரு பிரதேசத்தில் தான் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தெரிவத்துள்ளார். அவரின் கணவர் போரில் கொல்லப்பட்டுவிட்டார்.
இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேறு வீடுகள் வழங்கப்படவும் இல்லை.
மேலும் அங்கு வாழும் இளம் பெண்களை சிறீலங்கா இராணுவத்தினர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். தன்னை ஏழு இராணுவத்தினர் கூட்டமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்கான அவரின் அடையாளத்தை நாம் வெளியிடவில்லை. தனது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரே தன்னை இழுத்துச் சென்று இந்த வன்முறையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்காவில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் பிரதிநிதி அலன் கீனனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அங்கு வாழும் தமிழ் மக்கள் மீது போர் முடிந்த பின்னரும் வன்முறைகள் தொடர்வதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஜொலந்தா போஸ்ரர் என்வரும் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 ஏப்ரல் 2011

புலிகள் மருத்துவ மனைகளை தமது தேவைக்கு பயன்படுத்தவில்லை!

இறுதி நேரம்வரை விடுதலைப்புலிகள் வைத்தியசாலைகளை தமது தேவைக்காக பாவிக்கவில்லை என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 தை மாதம் தொடக்கமே இலங்கை அரசு படைகள் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களை கோத்தபாய புலிகளின் இராணுவ இலக்கு என குறிப்பிட்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் தாக்குதல் நடந்தது உண்மை ஆனால் புலிகள்தான் அங்கு இருந்தார்கள் எனவும் அங்கு பொதுமக்களோ நோயாளர்களோ இருக்கவில்லை எனவும் கூறியிருந்தார். தைமாதம் முல்லைத்தீவு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் வீடியோ ஆதாரங்கள், மற்றும் கண்கண்ட சாட்சிகளால சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் உள்ளார்கள் .
இந்த நிலையில் வைத்தியசாலை மீதான தாக்குதல்கள் பக்கசார்பின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது. இதே வேளை விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் இறுதிவரை அவர்கள் இராணுவ தேவைக்கு வைத்தியசாலைகளை பாவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது நிபுணர் குழு அறிக்கை.

போராட்டத்திற்கு தயாராகுமாறு பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள்!

மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான கால பகுதியை துக்கத்தினங்களாக அனுஷ்டிக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் மே மாதம் 19 ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தயாராகுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை ருத்ரகுமாரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள், நிபுணர்கள் குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு பாரிய அழுத்தங்களை கொடுக்க முயற்சித்து வருவதாக பிரித்தானியாவில் இயங்கும் சிங்கள அமைப்பான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

20 ஏப்ரல் 2011

தமிழர்கள் விழித்தெழ வேண்டிய தருணம் வந்து விட்டது!

இன்று மாலை 7.00 மணிக்கு சனல் 4, மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் இலங்கை போர்குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக இது அமையவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக சிங்களம் சுமார் 10 லட்சம் கையெழுத்துக்களை திரட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் இன்னும் விழிப்படையாது அப்படியே உள்ளனர் என்பது வேதனைக்குரிய விடையமாக உள்ளது. சனல் 4 தொலைக்காட்சி, மற்றும் அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் இலங்கை குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதால், ஐ.நா வுக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகிறது. இச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களும் சரிவர கையாளவேண்டும். தமிழர்கள் ஐ.நா வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் அலுவலகங்களை தமிழர்கள் முற்றுகையிடவேண்டும்.
லிபியாவுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததுபோல, இலங்கைக்கும் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி மக்கள் வீதிக்கு இறங்கவேண்டும். அதற்கான காலமும் நேரமும் கூடியுள்ளது என்றே கூறவேண்டும். ஐ.நா அறிக்கை குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சி கோத்தபாய ராஜபட்க்ஷவிடம் கேட்டபோது, அவர் மிகவும் காட்டமாகப் பதிலளித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சிகளில், இதுவும் வெளியாகவுள்ளது. சர்வதேச ஊடகங்கள் தமிழர் பக்க நியாயங்களைப் பற்றிப்பேச ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர்கள் மெளனாக இருப்பது பயன்தராது.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடைபெற்றவேளை தமிழர்கள் எவ்வாறு வீதிக்கு இறங்கிப் போராடினார்களோ, அவ்வாறானதொரு போராட்டம் உடனடியாக, உலகளாவியரீதியில் நடாத்தப்படவேண்டும். அதற்கான தரணமும் இதுவே ! இதனை விடுத்தால் தமிழர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. ஐ.நாவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கவேண்டும் இல்லையேல், அதனை ஏற்கவைக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கவேண்டும்.

ஐ.நாவுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு சமயத்தலைவர்களை நிர்ப்பந்திக்கிறது ஸ்ரீலங்கா!

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கடும் கண்டணத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுமாறு சகல சமயத் தலைவர்களையும் அரசாங்கம் பலவந்தப்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஒட்டுமொத்த கண்டனத்தை சமயத் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டும் எனவும் பெளத்த சிங்கள பேரினவாத அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த தலைவர்களிடம் இந்த விண்ணப்பத்தை அரசாங்கம் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.ஐ.நாவைக் கண்டிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிகளிலும் கலந்து கொள்ளுமாறும் சமயத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.

நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை புறம்தள்ள முடியாது!

இலங்கையின் இறுதிக்கட்டப் யுத்தத்தின் போது பொதுமக்கள் நாற்பதாயிரம் பேர் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகளை தற்போதைக்கு புறந்தள்ள முடியாது என ஊடகங்களில் கசிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது என பீபீசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் ஐ.நா. நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாதுள்ளது.
இந்நிலையில் அந்த அறிக்கையின் பாகங்கள் சில கசிந்துள்ளதாகக் கூறி இலங்கையிலுள்ள நாளிதழ்கள்-குறிப்பாக அரச சார்பு செய்தி நாளிதழ்கள் கட்டம் கட்டமாக அவ்வறிக்கையின் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் யுத்தத்தின்போது, யுத்தகுற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று கூறும் அளவுக்கு சர்வதேச சட்டங்களை மீறும் வகையிலான பெரும் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா. நிபுணர் குழு கண்டறிந்துள்ளது என இலங்கையில் அண்மையில் கசிந்த ஐ.நா. குழுவின் அறிக்கையுடைய சுருக்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
அதற்கு இலங்கை அரச தரப்பிலிருந்தும், அங்குள்ள பெரும்பான்மைக் கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வரவேற்பதாக பீபீசியிடம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, இவ்வாறு வெளியாகியுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் சரியானவை தான் என்பதை ஐ.நா. அதிகாரிகள் பீபீசிக்கு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆக கசிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் வெளியாகியுள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு:
1) இலங்கையில் யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டு காலம் கடந்துவிட்டுள்ளது என்றாலும், இறுதிப் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படக் கூறமுடியாதுள்ளது. ஆயினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் பேர் என்று பல்வேறு வழிகளிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நிராகரித்துவிட முடியாது என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
2) முழுமையான விசாரணைகளின் மூலமே கொல்லப்பட்ட மக்களின் மொத்தக் கணக்குப் பற்றிய முடிவொன்றுக்கு வரமுடியும் என்பதையும் ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
3) வன்னியில் யுத்தத்தின் போது அங்கு சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை எத்தனை என்பது தெரியாத நிலையில், அந்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கலாம் என்றளவில் கணிக்கப்பட்டிருந்தது.
4) அத்தோடு யுத்த வலயத்திலிருந்து வந்த மக்களை பிரித்து அவர்களை முகாம்களுக்கு அனுப்பிய நடைமுறை வெளிப்படையாக நடைபெறாத காரணத்தினால் அங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள் என்ற விபரங்கள் இல்லை.
5) இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளும் கட்டாயப்படுத்தி ஆட்களைப் படையில் சேர்தததால் புலிகளின் எண்ணிக்கை பற்றிய விபரங்களும் இல்லை.
6) அதுமட்டுமன்றி பெருமளவிலான கொல்லப்பட்ட மக்களின் இறப்புகள் எதுவும் பதியப்படாமலேயே அவர்கள் புதைக்கப்பட்டுவிட்டார்கள்.
என்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்த விபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலிருந்த ஐநா அலுவலக அதிகாரிகள் கொடுத்த புள்ளிவிபரங்களையும் நிபுணர் குழு கருத்தில் எடுத்துள்ளது.
ஐ.நா. இதுவரை வெளியிடாது வைத்திருந்த புள்ளிவிபரங்களின் படி, ஓகஸ்ட் 2008 முதல் மே 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் 7,721 கொல்லப்பட்டும் 18,479 பேர் காயமடைந்தும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் 2009 பெப்ரவரியில் ஐ.நா. அதிகாரிகள் உயிர்ச் சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அதன் பின்னர் போர் வலய மக்களை சென்றடைவதற்காக வழிகள் இல்லாமையால் அந்த முயற்சிகளும் கைகூடவில்லை எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் இழப்புகளின் புள்ளி விபரங்கள் பற்றி ஐ.நா. எடுத்துக்கூறிய போதெல்லாம் அந்த எண்ணிக்கைகளை கட்டுக்கதைகள் என இலங்கை அரசு புறந்தள்ளியது என்பதையும் ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையில் பொதுமக்களின் இழப்புகள் பற்றிய பாகத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனவாத ஸ்ரீலங்கா அரசுக்கு ரஷ்யா ஆதரவு!

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு கடந்த வாரம் சமர்பித்த அறிக்கை நேற்று முன்தினம் (18) நடைபெற்ற ஐ.நாவின் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார தலைவர் லியன் பெஸ்கோ அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். எனினும் சிறீலங்கா தொடர்பான அறிக்கையை ரஸ்யா எதிர்த்துள்ளது.
ஆனால் ஐவேரி கோஸ்ட் பிரச்சனை தொடர்பிலும் ரஸ்யா தனது எதிர்ப்பை காண்பித்தபோதும், ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மேற்குலக நாடுகள் படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன.
இதனிடையே, சிறீலங்கா அரசே ஐ.நாவின் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கியதாக ஐ.நா அதிகாரிகள் உறுதிபடத் தெரிவிப்பதாக ஐ.நாவின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்று குவித்தும்,பல்லாயிரக்கணக்கில் மக்களை அங்கவீனர்களாக்கியும் உள்ள ஒரு இனவாத அரசான ஸ்ரீலங்காவிற்கு ஆதரவு வழங்குவதென்பது அந்த நாடுகளின் ஜனநாயகம் எந்தளவிற்கு உள்ளது என்பதை தெளிவு படுத்தி நிற்கிறது.

19 ஏப்ரல் 2011

திரு,நடேசன் அவர்களை புலிகளே சுட்டனராம்!கனகரத்தினத்தின் துரோகத்தனம்.

புலிகளே ப.நடேசனையும் புலித்தேவனையும் சுட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முந் நாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் அவர்கள் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடியோடு சென்று சரணடைந்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களை இலங்கை இராணுவம், பல சித்திரவதைகளுக்கு பின்னர் சுட்டுக்கொண்ற ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் தனது மகனைத் தொடர்புகொண்டு, தான் சரணடையச் செல்வதாகவும், இன்னும் 30 நிமிடங்களில் நான் திரும்பவும் உன்னைத் தொடர்புகொள்ளவில்லை என்றால் எனக்கு உயிராபத்து நேர்ந்ததாக கருதலாம் என்றும் சொல்லியிருந்தார் என்பது பலரும் அறிந்த விடையம்.
ஐ.நா அதிகாரிகள், ரைம்ஸ் ஒன்லைன் மெரியா கெல்வின் போன்ற முக்கிய புள்ளிகளோடு பேசி அவர்கள், அதனை இலங்கை அரசுக்கு தெரியப்படுத்திய பின்னரே புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடையச் சென்றனர். ஆனால் முந் நாள் எம்.பி கனகரட்னம் அவர்கள் புலிகளே நடேசனைக் கொண்றதாகப் பிதற்றியுள்ளார். இறுதி நேரங்களில் இராணுவத்திடம் யார் சரணடையச் சென்றாலும் அவர்களைச் சுட்டுத்தள்ளுமாறு தேசிய தலைவர் கட்டளையிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுமார் 600 பேர்வரை இவ்வாறு கொல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இத் தகவல்களை இவர் இவ்வளவு நாளும் வைத்திருந்து, ஐ.நா அறிக்கை வெளிவரும்போது ஏன் தெரிவிக்கவேண்டும் என்ற சந்தேகங்கள் எழுகின்றது.
அத்தோடு தேசிய தலைவர் அவர்களின் அனுமதியோடே, புலிகளின் அரசியல் மற்றும் மருத்துவப் பிரிவினர் சரணடைய எத்தனித்தனர் என்பது யாவரும் அறிந்தவிடையம். இந்தவேளையில், கனகரடனம் அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பது தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு ஈனச் செயலாக அமைந்திருக்கிறது. போரின்போது, ஒரு தமிழன் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லப்படவில்லை என இவர் ஆங்கில இணையம் ஒன்றிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். ஐ.நா உட்பட, போரை நேடடியாக தான் செயற்க்கைக் கோள் உதவியோடு பார்த்ததாககச் சொல்லும் பல அமைப்புகள், அங்கே அப்பட்டமாக மனித உரிமை மீறல் மற்றும் போர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் கனகரட்னமோ அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனக் கூறுகிறார். தமிழராகிய இவர் முந் நாள் எம்.பி என்பதும், தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற ரீதியில் மட்டுமல்லாது முள்ளிவாய்க்காலிலும் இறுதிவரை நின்றவர் என்ற ரீதியில் அவர் தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் பல பாதிப்புகளைத் தோற்றுவிக்கலாம். இவர் அரசாங்கத்தின் பிடியில் இருந்து, இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகிறாரா இல்லை சுதந்திரமாக வேறு ஒரு நாட்டில் இருந்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளாரா எனத் தெரியவில்லை. மக்கள் யாரவது இது குறித்து அறிந்தால் தெரியப்படுத்தவும். சர்வதேசத்தின் மத்தியில் சிக்கலில் மாட்டியிருக்கும் இலங்கையைக் காப்பாற அபாண்டமான பொய்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார் கனகரட்னம் அவர்கள்.
பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட மக்களின் ரத்தத்துக்கு மேல், ஆயிரம் ஆயிரம் போராளிகள் விடுதலைக்காக குருதி சிந்திய மண்ணிற்குமேல் நின்று பொய் கூறும் இவரைப் போன்றோர் தமிழையும், தமிழ் தாயையும், தாய் நாட்டையும் காட்டிக்கொடுக்கும் கயவர் ஆவர் ! தமிழீழ சரித்திரத்தில் இவர்கள் எப்போதுமே மன்னிக்கப்பட மாட்டார்கள் என்பது உறுதி!
நன்றி:அதிர்வு.கொம்

பாதுகாப்பு பேரவையில் நிபுணர் குழு அறிக்கை!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை அந்த அமைப்பின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட அரசியல் விவகார அதிகாரி லியன் பெஸ்கோவை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கட்டார் மற்றும் எகிப்து விவகாரங்கள் குறித்து பாதுகாப்புப் பேரவையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
2009ம் ஆண்டில் கொஸ்டரிக்கா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போது சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
எவ்வாறெனினும், 2011ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழீழ மக்களுக்காய் தற்கொடை புரிந்த தமிழக இளைஞர்!

இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தமிழ்நாட்டு வாலிபரொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்திலுள்ள சீகம்பட்டி பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது வாலிபரான கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியியலாளர் ஒருவரே அவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ஈழத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின் அவர் தன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தீமூட்டிக் கொண்டு வீதி வழியாக ஓடிச் சென்ற போது அவரது பெற்றோர் பின்னாலேயே ஒடிச் சென்று தீயை அணைக்க முயன்றுள்ளனர். முடியாமற் போன பின்பு தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

18 ஏப்ரல் 2011

கொலைகாரனிடமே விசாரணை பொறுப்பா?செந்தமிழன் சீமான் சீற்றம்!

ஐ.நா.நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஸ்ரீலங்கா அரசுப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேளி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் ஸ்ரீலங்கா அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்து பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது. மார்சுகி தாருஸ்மான் தலைவராகவும், யாஷ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஐ.நா.நிபுணர் குழு, பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள அறிக்கை, உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனப் படுகொலைப் போரை நடத்திய ஸ்ரீலங்கா அரசிடமே விசாரணை பொறுப்பை ஒப்படைப்பது, கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதற்கு நிகரானது. தமிழர்களுக்கு எதிரான அந்தப் போரில் மிகப் பெரிய அளவிற்கு போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதெனவும், போர்ப் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செல்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள நிபுணர் குழு, இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட ஸ்ரீலங்கா அரசிடம் விசாரணைப் பொறுப்பை எந்த அடிப்படையில் ஒப்படைக்குமாறு கூறுகிறது? ஸ்ரீலங்கா அரசு செய்த மிகப் பெரிய போர்க் குற்றம், தங்களோடு இருந்த மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க, துப்பாக்கிகளை மெளனிக்கின்றோம் என்று அறிவித்துவிட்டு, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அமைதி செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட 300 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்ததும், அதன் பிறகு, மே 18ஆம் தேதி ஒரே நாளில் முள்ளி வாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததும்தான். சரணடைய வந்த புலிகளின் அமைப்பினரை கொன்றதற்கும், இறுதிக் கட்டப்போரில் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்களை கொன்று குவித்ததற்கும் உத்தரவிட்டது ஸ்ரீலங்கா அரசுதானே? ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புச் செயலராக உள்ள அதிபர் ராஜபட்சவின் தம்பி கோத்தபய ராஜபட்சா அல்லவா? உலகம் அறிந்த இந்த உண்மைக்கும் பிறகும் விசாரணை பொறுப்பை ஸ்ரீலங்கா அரசிடம் வழங்கு என்று பரிந்துரைப்பது அங்கு நடந்த உண்மைகளை வெளிக்கொணரவா? அல்லது தமிழினப் படுகொலையை புதைக்கவா? ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக ஆதாரப்பூர்வமான குற்றச்சாற்றுகளை பட்டியலிட்டுள்ள நிபுணர் குழு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாற்றுகளையும் பட்டியலிட்டுள்ளது வருத்தத்திற்குரியது. தங்களோடு இருந்த மக்களை கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாற்றை நிபுணர் குழு வைத்துள்ளது. தமிழினத்தையே அழித்தொழிக்கும் திட்டத்தோடு செயலாற்றிவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் ராணுவத்தை, தமிழர்களை கேடயமாகக் கொண்டு எவ்வாறு தடுத்திட முடியும்? கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்துவரும் ஸ்ரீலங்கா அரச படைகளுக்கு அப்படிப்பட்ட மனிதாபிமானம் உண்டென்று ஐ.நா.நிபுணர் குழு நம்புயுள்ளது வியப்பைத் தருகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் ஒரே கோரிக்கை, இலங்கையின் பூர்வீகக் குடிகளாக தமிழ் மக்களை திட்டமிட்டு அழித்தொழித்த ஸ்ரீலங்கா அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும் என்பதே. ஆனால் ஐ.நா. அதனைச் செய்யுமா என்ற சந்தேகம் நிபுணர் குழு பரிந்துரையால் ஏற்பட்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சனை தொடர்பில், அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான ஸ்ரீலங்கா அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது. இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடு்ப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால், அது ஸ்ரீலங்கா அரசு நடத்திய இனப் படுகொலையை மறைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாற்றி்ற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் ஒரு இலட்சம் பேரை காணவில்லை!

கடந்த 2009 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற போரின் பின்னர் அங்கிருந்த தமிழ் மக்களில் 100,000 பேர் காணாமல்போயுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்போர் செய்தி நிறுவனம் கடந்த சனிக்கிழமை (16) தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் நிர்வாக அலுவலகங்களின் மக்கள் தொகை படிவங்களின் பிரகாரம் 2008 ஆம் ஆண்டு அங்கு 430,000 தமிழ் மக்கள் வாழந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின் படி போர் நிறைவுபெற்ற பின்னர் அங்கிருந்த 290,000 மக்களே வவுனியாவுக்கு வந்துள்ளனர். 60 விகிதமான மக்கள் தமது இடத்திற்கு திரும்பியுள்ளனர். வன்னியில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும்வண்ணம் மிகவும் உயர்வானது என ஐ.நாவின் கொழும்புக்கான முன்னாள் பிரதிநிதி கோடன் வைஸ் கூட தெரிவித்திருந்தார். 20,000 தொடக்கம் 40,000 மக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால் அது அதனை விட அதிகமாகவும் இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழம் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வு!

ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் எதனையும் சிறீலங்கா அரசு நிறைவேற்றப்போவதில்லை. அதனை சிறீலங்கா அரசு உடனடியாகவே நிராகரித்தும் உள்ளது. எனவே சிறீலங்கா அரசின் இனஅழிப்பில் இருந்து தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமாயின் அதற்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என அமெரிக்காவின் இல்னொய்ஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல்ட் தெரிவித்துள்ளார். தமிழ்நெற் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களுக்கான தனியான நாடு உருவாகுவதை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும். வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புக்கள் தற்போதும் தொடர்கின்றது. ஐ.நாவின் அறிக்கையில் உள்ள பரிந்துரை ஒன்றின் இரண்டாவது சரத்தில் காணப்படும் “சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐ.நா ஒரு அனைத்துலக கண்காணிப்பாளர்களின் குழுவை அமைக்கவேண்டும்” என்ற கருத்திற்கு தமிழ் மக்கள் தமது ஆதரவுகளை வழங்கவேண்டும். ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் லிபியா தொடர்பில் உருவாக்கிய தீர்மானத்தை போன்றதொரு தீர்மானம் சிறீலங்கா மீது கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதனை மேற்கொள்ளும் நிலையில் சபை இல்லை. 2009 ஆம் ஆண்டு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஐ.நாவின் சார்பில் பான் கீ மூன் அனைத்துலக கண்காணிப்பாளர்களை அமைக்கலாம். அறிக்கையில் காணப்படும் ஏனைய பரிந்துரைகளை சிறீலங்கா அரசு ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை. எனவே இந்த நிலையில், சிறீலங்காவில் காணப்படும் நீண்டகால இனப்பிரச்சனைக்கு தமிழீழம் மட்டுமே தீர்வாக முடியும். அனைத்துலக சமூகம் அதனை அங்கீகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

17 ஏப்ரல் 2011

யாழில் அதிகரித்துள்ள காணாமல் போதல் சம்பவங்கள்!

யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 50 மேற்பட்ட காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போதல் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறையினர் ஒப்புக் கொண்ட போதிலும், முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிட மறுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2005 – 2007ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யக் கூடிய இடமில்லாமையினால் இந்த முறைப்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் யாழ்ப்பாண நகரில் ஐந்து பேரைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் குறித்து அதிக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை கண்டு பிடிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா,சீனாவிடம் அடைக்கலம் கோரும் கோத்தபாய!

தனது உறுப்பு நாடான இலங்கையைப் பாதுகாக்க ஐ.நா. சபை தவறும் பட்சத்தில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளிடம் அடைக்கலம் கோர வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஒரு சில நாடுகளின் மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் தனது அங்கத்துவ நாடொன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான அறிக்கைகளை வெளியிட முனைப்பு காட்டினால், சீனா, ர'ஷ்யா போன்ற நாடுகளிடம் பாதுகாப்பு கோர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை மறைமுக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு சில நாடுகளினால் தமக்குத் தேவையான முறையில் பலாத்காரமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. தனது அங்கத்துவ நாடொன்று என்ற வகையில் இலங்கைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஐக்கிய நாடுகளின் கடமையாகும். தவிரவும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு புரிந்துகொள்ளத் தவறியுள்ளது. விமானப்படை, கடற்படை மற்றும் தரைப் படைகளைக் கொண்டமைந்ததாக வலுவான படைக்கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர். ஆனால் அவையெல்லாம் கவனத்திற்கொள்ளப்படாமல் சில மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தவறான தகவல் மூலங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த வலயத்திற்குள் நேரடி அனுபவத்தைக் கொண்டிருந்த உலக உணவுத் திட்டம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற முன்னணி தொண்டு நிறுவனங்களின் கருத்துக்களுக்கு நிபுணர் குழு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளது. இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள், பொதுமக்கள், அரசாங்க சொத்துக்களை இல்லாதொழிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏராளம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இராணுவத்தினருடனான இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதுடன், பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என களத் தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுவோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் சிறிதளவேனும் உண்மையில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

16 ஏப்ரல் 2011

குமுறுகிறார் இனவாத அமைச்சர் திஸ்ச வித்தாரண!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பரப்பி வரும் வதந்திகளை ஆதாரமாகக் கொண்டே ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இனவாத அரசின் சிரேஷ்ட அமைச்சரான திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றம் புரிந்ததாகக் கூறி சர்வதேச நீதிமன்றிற்கு இலங்கையை அழைத்துச் செல்வதே ஐநா நிபுணர் குழு அறிக்கையின் ஒரு நோக்கமெனவும் இந்த சிங்கள அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் குறித்த அறிக்கையை தாம் முற்றாக புறக்கணிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரித்த நிபுணர் குழு!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு நிராகரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் தி ஐலண்ட் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கப் படையினர் ஆகிய இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கப்படையினர் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், சரணடைந்த புலிகளை தாக்கியதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்பாவி பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு அரசாங்கம் தடை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.அறிக்கையை ஆராயும் இராஜதந்திரிகள்!

ஐ.நாவின் அறிக்கை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதில் பெரும் எண்ணிக்கையான இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை (12) செயலாளர் நாயகத்திடம் கையளித்தபோதும் அது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனினும் சிறீலங்கா அரசுக்கு அது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிராகரிப்பதாக சிறீலங்கா அரசு உடனடியாக தெரிவித்தபோதும், அது தற்போது அறிக்கையை ஆய்வு செய்வதில் உள்ளூர் மற்றும் அயல்நாடுகளின் இராஜதந்திரிகளின் உதவிகளை நாடியுள்ளது. ஐ.நாவின் அறிக்கையில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பரிந்துரைகள் காணப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, ஐ.நா தனது ஆலோசனைக்குழுவை அமைத்தபோது சிறீலங்கா அரசு கொழும்பில் உள்ள ஐ.நா தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்ட வன்முறைகளை போன்றதொரு வன்முறைகள் மீண்டும் இடம்பெறலாம் என ஐ.நா அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

15 ஏப்ரல் 2011

பான் கீ மூன் சர்வதேச விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்!

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், சிறீலங்காவில் இடம்பெற்ற போக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐ.நாவின் ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் பதிலை வழங்குவதற்கான அழுத்தம் ஐ.நா மீது பிரயோகிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை அது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என நம்புகிறோம். சிறீலங்கா அரசு அமைத்துள்ள விசாரணை குழு போதுமானது அல்ல. எனவே அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை அமைப்பது அவசியமானது. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைக்குழு ஒன்றை அமைக்கும் சாத்தியம் ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கோ அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கோ கிடையாது. ஏனெனில் சிறீலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கிவரும் சீனா மற்றும் ரஸ்யா போன்றவை வீட்டோ அதிகாரம் கொண்டவை. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டதாக ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும். அந்த குழுவானது மேலதிக விசாரணைகளை நடத்தும் அதிகாரம் கொண்டதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு செய்மதி சான்றுகள் உண்டு!

இலங்கை வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இலங்கைப்படையினர் வன்னியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு மற்றும் ஒரு சான்று கிடைத்துள்ளது. தெ கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் என்ற இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.எனினும் இந்த செய்மதி படங்களின் மூலம் பொதுமக்களின் சடலங்களை தெளிவாக காட்டமுடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வாசிங்டனில் அமைந்துள்ள AAAS எனப்படும் American Association for the Advancement of science நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளரான புரொம்லி என்பவர், இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது செய்மதிகளின் மூலம் யுத்த நிலவரங்களை சேகரித்துள்ளார். சுமார் 15 மணித்தியாலங்களாக இந்த தகவல்கள் மூலம் வன்னியில் ஏற்கனவே பொதுமக்கள் ஒன்றுகூடிய இடங்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் மயானங்கள, பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடததியமையை அவதானிக்க முடிகிறது. இந்தநிலையில் செய்மதி படங்களின் மூலம் இலங்கைப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களின் மீதே தாக்குதல் நடத்தியதாக நம்புவதாக புரொம்லி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமது படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை என்று இலங்கை அரசாங்கம் மறுப்பு வெளியிட்டு வருகிறது. எனினும் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை ஒப்புவிக்க முடியும் என்று தெ கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் என்ற இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

14 ஏப்ரல் 2011

சர்வதேச மட்டத்தில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான அழுத்தங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின், இலங்கை தொடர்பான அறிக்கையை பொதுச்செயலர் பான் கீ மூன் ஆராய்ந்து வரும் பின்னணியில் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளன என்பதை இராஜதந்திரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு நேற்றுமுன் தினம் தனது அறிக்கையை கையளித்தது.
மேற்கொண்டு என்ன நடவடிக்கையை எடுப்பது என்பதை முடிவு செய்வதற்காக அந்த அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் கவனமாக ஆராய்ந்து வருகிறார். அந்த அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான, பாதகமான அம்சங்களே அதிகம் காணப்படுகின்றன என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இரு தரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை ஐ.நா. நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என ஐ.நா. ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்
எனவே அவற்றுக்குப் பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அனைத்துலக விசாரணையை ஐ.நா. முன்னெடுக்க வேண்டும் எனவும் நிபுணர் குழு அறிக்கையில் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம் என அந்த ராஜதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய ஐ.நாவுக்கான ஆசிய வதிவிடப் பிரதிநிதி ஒருவர், 'இலங்கை நிகழ்வுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மிகப் பெரியளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அத்தகைய ஒரு விசாரணைக்கு நிபுணர் குழு கோரிக்கை விடுக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும்'' எனவும் அவர் கூறியுள்ளார்.

போரின் இறுதி மாதங்களில் 83,130 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சிறீலங்கா அரசின் தடை முகாம்களில் இருந்த 13,130 பேர் காணாமல்போயுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்துப்பட்டறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் நாள் நடைபெற்ற இந்த கருத்துபட்டடறையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி கருண்யன் அருள்நாதன் ஆற்றிய உரையிலோயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,000 தமிழ் மக்களும், மே மாதம் 9 ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரையிலும் 25,000 தமிழ் மக்களுக்கு கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 ஏப்ரல் 2011

இன அழிப்புக்கு உலக வங்கியும் உதவுகிறது!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கு உலகவங்கியும் உதவிகளை வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை மேற்கு பகுதியுடன் இணைக்கும் வீதிகளின் அபிவிருத்தி மூலம் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனஅழிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகலாம் என தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் உலக வங்கி அதற்கான உதவிகளை வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தை மேற்கு பகுதியுடன் இணைக்கும் வீதிகளின் அபிவிருத்திக்கு உலக வங்கி 100 மில்லியன் டொலர்களை நேற்று (12) வழங்கியுள்ளது. கிழக்கு பகுதி மக்களை மேற்கு பகுதி மக்களுடன் இணைப்பது சிறீலங்கா அரசின் அபிவிருத்தித்திட்டத்திற்கு அனுகூலமானது என உலக வங்கியின் கொழும்புக்கான பிரதிநிதி டயறிரோ கயே தெரிவித்துள்ளார். அபிவிருத்தி என்றபோர்வையில் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனஅழிப்புக்கான உதவிகளை உலக வங்கி மேற்கொண்டுவருவதற்கு எதிராக உலகவங்கியில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு எதிரான போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்த கொடூரங்களுக்கு என்ன செய்யப்போகிறோம்?

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உட்பட தமிழீழ விடுதலைப புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைவதாக ஐ.நா அதிகாரிகள் மூலம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டது. இவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதாகவும் இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சரணடைந்தனர்.
சரணடந்தவர்களுக்கு நடந்ததோ வேறு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள் சிலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ப.நடேசன் அவர்களின் மனைவி கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் ப.நடேசன் புலித்தேவன் உட்பட இன்னும் சில போராளிகளையும் கட்டிவைத்து மனித குலத்திற்கே விரோதமான முறையில் கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவிற்கு இராணுவத்தினர் கூட்டுச் சித்திரவதைகளை மேற்கொண்டனர் கடும் சித்திரவதைகளின் போது அவர்களின் அடிவயிற்றிலும் உடலின் முக்கிய பகுதிகளிலும் நெருப்பால் அல்லது சுடு கருவிகளால் சுடப்பட்டுள்ளதையும் அவர்களின் உடல் முழுவதும் காணக்கூடியதாக உள்ளது. சித்திரவதைகளின் வேதனைகளைத் தாங்கமுடியாமல் சித்திரவதையின் போதே இவர்கள் இறந்திருக்க வேண்டும் அல்லது பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசின் துணையுடனே இந்தப் படுகொலைகள் நடந்துள்ளதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அது போக இவை அனைத்தையும் பார்த்துவிட்டு நாம் என்ன செய்யப்போகிறோம்.????