02 மார்ச் 2011

வடமராட்சி மக்களை உடன் பதிவு செய்யுமாறு படை எச்சரிக்கை!

வடபகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவரும் சிறீலங்கா இராணுவம், வடமராட்சி பகுதியில் வாழும் தமிழ் மக்களை இன்று (02) காலை 10.30 மணிக்கு முன்னர் படை முகாம்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடபகுதியில் இராணுவ நிர்வாகத்தை நடைமுறைப்படுத்திவரும் சிறீலங்கா அரசு, அங்கு வாழும் மக்களின் நிர்வாகத்தை இராணுவத்தினரின் கைகளில் ஒப்படைத்துள்ளது.
இதனை தொடர்ந்து வடபகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவரும் சிறீலங்கா இராணுவம், வடமராட்சி பகுதியில் வாழும் தமிழ் மக்களை இன்று (02) காலை 10.30 மணிக்கு முன்னர் படை முகாம்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
புகைப்படங்களுடன் கூடிய பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் எச்சரிக்கையால் அச்சமடைந்துள்ள மக்கள் தாம் திறந்த வதை முகாம்களில் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களை இராணுவத்தினர் பதிவு செய்வதை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்கு தாக்கல் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் சிறீலங்கா அரசு 24 மணிநேரத்திற்குள் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அறிவித்தலை விடுத்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் ஈழத்தாய் பார்வதி அம்மாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியதற்கு பழிவாங்கவே இராணுவத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் எஸ் கஜேந்திரன் ஆகியோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் உடுவில் மற்றும் தென்மராட்சி பகுதிகளில் உள்ள பிரதேச இராணுவ தலைமையகங்களும் தமிழ் மக்கள் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகளை வழங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக