தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடைசெய்துள்ள நாடுகளில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் அந்தந்த நாடுகளிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி தற்போது பிரிட்டனில் வாழும் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியாரான அடேல் பாலசிங்கம், அமெரிக்காவில் உள்ள வி. ருத்ரகுமாரன் மற்றும் நோர்வேயிலுள்ள நெடியவன் உள்ளிட்டோருக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கை மற்றும் அவற்றுக்கு கட்டளையிடுதல், உயிரிழப்புகளுக்காக ஒத்துழைப்பு வழங்கியமை போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசாங்கத் தரப்பிலுள்ள முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகளை இல்லாதொழித்தும் கூட சிறீலங்கா அரசின் பாதுகாப்பு பிரிவுக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்களை புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையிலேயே சர்வதேச நீதிமன்றத்திற்கு இதனைக் கொண்டுசெல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக