07 மார்ச் 2011

புலிகள் முடிந்து போன அத்தியாயமாம்!

கப்பலில் வருகை தந்த அகதிகளின் விவகாரத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து அவர்களை இன்னமும் விடுவிக்காத தற்போதைய அரசு, புலிகளின் மறைமுக வலைக்குள் சிக்கியுள்ளதாக கனடாவின் பிரபல்ய பத்திரிகையான குளோப் அன்ட் மெயில் தெரிவித்துள்ளது.
கனடாவில் ஆட்சி புரியும் கன்சவேட்டிவ் கட்சியும் அதன் மாகாணக் கட்சியும் புலிகளின் மாய வலைக்குள் விழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மேற்படி பத்திரிகை இந்தக் குழுவினர் 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பிற்பாடு இந்தச் செயற்பாட்டை ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளது.குளோப் அன்ட் மெயில் பத்திரிகையின் நிருபருடன் உரையாடிய நேரு குணரத்தினம் என்பவர் விடுதலைப் புலிகள் முடிந்து போன அத்தியாயம் அவர்களைப் பற்றி இனிக் கனடியர்கள் கவலைப்படத் தேவையில்லையெனவும் விடுதலைப்புலிகள் இனி ஒரு சக்தியே அல்லவெனவும் ஆனால் தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
2003ம் ஆண்டு சமாதன காலப்பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்ட 14 பேர் அடங்கிய சமாதானக் குழுவில் நேருவும் இடம்பெற்றிருந்தார். அதுமட்டுமா கடனாவில் நடக்கும் மாவீரர் தினத்தில் உரை நடாத்துபவரும் இவரே ஆவார். இவரால் தற்போது பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முன்வைப்பட்டுள்ளது மிக வெட்கப்படவேண்டிய விடையமாகும். புலிகள் பலம்பெருந்திய அமைப்பாக இருக்கும் போது அவர்களைப் பற்றி பெருமைபேசி பின்னர் போர் முடிவுக்கு வந்ததும் அப்படியே அந்தர் பெல்ட்டி அடிக்கும் நேரு பொன்றோர் சமூகத்தில் உள்ள பச்சோந்திகளாவர்.
இவர்களை கனடிய மக்களின் பிரதிநிதி என்றும், மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் என நினைத்து பல வெளிநட்டு பத்திரிகைகள் பேட்டி காண்பதை முதலில் நிறுத்தவேண்டும். கனடியத் தமிழர்கள் ஈழப் போராட்டத்திற்கும் தமிழ் தேசியத்துக்கும் ஒருபோதும் பின் நின்றவர்கள் அல்லர். எனவே நேரு போன்ற பச்சோந்திகளை மக்கள் இனம் காண வேண்டும். அடுத்து தமிழர்களின் அரசியல் குறித்துக் கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழகப் பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி, தமிழர்கள் சகல கட்சிகளிலும் சேர்வதைத் தற்போது விரும்புகிறார்கள் என்றும் ஒரு கட்சி அவர்களை உரிமை கோருவதை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் இதே சேரன் அவர்கள் கனடாவில் உள்ள தமிழர்கள் உண்டியல் மூலம் இலங்கைக்குப் பணம் அனுப்புவது சட்டவிரோதமானது என்று கனேடிய பொலிசாருக்கு ஒரு அறிக்கை தயாரித்து அனுப்பியும் இருந்தார் என்பதனையும் யாரும் மறந்துவிடவில்லை.நேருவே கனடியத் தமிழர் தேசிய மக்களவையை உருவாக்கியவர் என குளோப் அன்ட் மெயில் குறிப்பிட்டுள்ள போதும், இவரே நாடு கடந்த அரசின் சத்தியப்பிரமாணம் எடுக்காத உறுப்பினர்களையும் வழிநடத்துபவர் எனக் கனடிய மக்கள் தெரிவிக்கின்றனர். தன்னைப் போன்றவர்கள் எதையுமே யதார்த்தமாக யோசிப்பதாகவும் தற்போதைய கள நிலவரத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகளைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை எனவும் நேரு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தி.தமிழரசன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக