08 மார்ச் 2011

தேசியத்தலைவர் இல்லை என்று சொல்வது மாபெரும் துரோகம்!

தமிழீழத் தேசியத் தலைவர் தமிழ் மக்களுடைய சொத்து. அவர் முன்னெடுத்த போராட்டம் ஒட்டு மொத்த தமிழினத்திற்குமான போராட்டம். அப் போராட்டத்தைக் களங்கப்படுத்துவதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தலைவரொருவர் தெரிவித்தார்.
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்பதற்காகவே கே.பி.யை துரோகி என தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தமிழ்நாடு மூத்த தலைவர்கள் கே.பி. கைதாவதற்கு முன்னரேயே அறிவித்தார்கள். அதுபோல இப்போது கனடாப் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிள்ள நேரு குணரத்தினத்தினையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் துரோகி என்று அறிவிப்பதற்கான வேலையை தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப்போராட்டம் சிரமங்களைத் தாண்டி மேலெழுந்து வரும் இந் நேரத்தில் இவ்வாறான கருத்தை தெரிவித்து குழப்பம் விளைப்பது உள்நோக்கம் கொண்ட ஒரு செயலே என்றும் தெரிவித்த மேற்படி தலைவர். சீமானின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளிற்கான ஆதரவுத் தளம் வளர்ந்து வரும் இவ்வேளை விடுக்கப்பட்டுள்ள இக் கருத்து தங்களை ஆதரிக்கும் மக்களைப் பலவீனப்படுத்துவதற்காக அமையும் எனக் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களை குழப்பும் வகையில் விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்து விட்டது. அவர்கள் இனி ஒரு சக்தியே அல்ல என்ற கருத்தை தெரிவித்த நேரு குணரத்தினத்தின் கருத்தை தேசியத் தலைவரையும். விடுதலைப் புலிகள் அமைப்பையும் நேசிக்கும் எவருமே ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும். நாடு கடந்த அரசு மக்களவைகள் உட்பட விடுதலையை ஆதரிக்கும் அமைப்புக்கள் மேற்படி நபரின் கூற்றை மறுத்து அறிக்கை வெளியிடுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பழ.நெடுமாறன், வை.கோ, தொல். திருமா, சீமான் உள்ளிட்ட தலைவர்களுடன் பேசி ஒன்றுபட்ட அறிக்கையாக இக் கூற்றை மறுதலித்து அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக