06 மார்ச் 2011

ஸ்ரீலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றலாம்!

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவின் செனட் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஒத்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் சிறீலங்கா மீது தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என விரும்புகின்றன.
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்காவின் செனட் சபை கடந்த வாரம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது.
மேற்குலகத்தின் இந்த நடவடிக்கைகள் சிறீலங்கா மீதான பொருளாதார தடைகளை கொண்டுவர உதவும் என முன்னாள் மூத்த இராஜதந்திரி சார்லி மகேந்திரன் சிறீலங்கா அரசை எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் பல மேற்குலகநாடுகள் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவருவதில் உறுதியாக உள்ள. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதில் சிறீலங்கா அரசின் இராஜதந்திரிகள் தோல்வியடைந்துள்ளனர்.
சிறீலங்கா அரசுக்கு எதிரான புலம்பெயர் தமிழ் மக்களின் நடவடிக்கைகளை முறியடிப்பதில் அவர்கள் தோல்விகண்டு வருகின்றனர். சிறீலங்காவில் உள்ள தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துவதிலும் சிறீலங்கா இராஜதந்திரிகள் தோல்வி கண்டுள்ளனர்.
எனவே தான் உலக நாடுகள் சிறீலங்கா அரசுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானங்களை தடுக்க முடியாத நிலையில் சிறீலங்கா அரசு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக