
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பில் முன்னர் பணியாற்றினார் என்ற காரணங்களை முன்வைத்து ஈழத்தமிழர் ஒருவரை நாடுகடத்த கனடா அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அவர் 10 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்.
அதன் பின்னர் அவருக்கு இயக்கத்துடன் தொடர்புகள் இருந்ததில்லை. எனவே 10 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களால் கனடாவின் பாதுகாப்புக்கு என்ன ஆபத்து ஏற்படும்?
மேலும் கனடாவின் இந்த முடிவுக்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்ய முடியும்.
கனடா அரசு அவரை நாடுகடத்தினால் சிறீலங்காவில் அவர் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக