07 மார்ச் 2011

எனது ஆட்சியை கலைக்க முடியாது என்கிறார் மகிந்த!

தனது அரசாங்கத்தை யாரும் இலகுவில் கலைக்கமுடியாது, அவ்வாறான ஆசை இருந்தால் அவர்கள் 2017 ஆம் ஆண்டுவரையும் காத்திருக்க வேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளதாக நேற்று (06) வெளியாகிய தினமின வாரஏடு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எனது ஆட்சியை யாரும் கலைக்க நினைத்தால் அவர்கள் 2016 அல்லது 2017 ஆம் ஆண்டுவரையும் காத்திருக்க வேண்டும். அப்போது தான் அரச தலைவர் தேர்தல் நடைபெறும் யாரும் எமது ஆட்சியை கவிழ்க்க முடியாது என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பொய்களை கூறித்திரிகின்றனர். வெளிநாட்டு சக்திகளின் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் முயன்று வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனீசியா, எகிப்த்து, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியால் கதிகலங்கிப்போயுள்ள சிறீலங்கா அரச தலைவர் தன்னை சமாதானப்படுத்த இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின்போது இந்தியாவின் துணையுடன், பல முறைகேடுகளை மேற்கொண்டு வெற்றியீட்டிய மகிந்தா தற்போது தான் அதிக வாக்குகளை பெற்றதாக கூறுவதை உலகம் வேடிக்கையாக பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக