
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா கடற்கரையை அடைந்த சன் சீ என்ற கப்பலில் சென்றடைந்த 498 ஈழத் தமிழ் மக்களில் 32 பேரை கனேடிய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
அவர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துவருகின்றனர்.
ஆனால் அவர்களால் கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்துக்களும் இல்லை என கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகளுக்கான சபை தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களால் கனடாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என தெரிவித்த கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சரின் கூற்றை, கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகளுக்கான சபை நிராகரித்துள்ளதுடன், அது தனது எழுத்துமூலமான அறிக்கையை கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) ஊடகங்களுக்கும் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக