கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற சமரில் விடுதலைப்புலிகள் தமது கட்டளை மையமாக பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத இரும்புத்தகடுகள் பொருத்தப்பட்ட மிகப்பெரும் பாரஊர்தியை இறுதி நேரம் அவர்கள் தகர்த்துவிட்டு சென்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வன்னிச் சமரில் விடுதலைப்புலிகள் நடமாடும் கட்டளை மையத்தையே தமது பிரதான கட்டளை தளமாகக் கொண்டிருந்தனர். எனவே தான் சிறீலங்கா வான்படையினராலும், ஆழ ஊடுருவும் படையினராலும் அவர்களின் பிரதம கட்டளை மையத்தை தகர்த்து போரை விரைவாக முடிக்க முடியவில்லை.
ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சமரின் போது அங்கிருந்து செயற்பட்ட தமது நடமாடும் கட்டளை மையத்தை தகர்த்தழித்த விடுதலைப்புலிகள், பின்னர் முள்ளிவாய்க்காலில் சமர் நிறைவடைந்தபோதும் அவ்வாறான ஒரு கட்டளை மையத்தை சேதமாக்கிய பின்னர் கைவிட்டு சென்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
நவீன தொலைதொடர்பு கருவிகள், தொலைதொடர்பு தகவல்களை ஒருங்கிணைக்கும் கட்டுப்பாட்டு தொகுதிகள், செய்மதி தொலைதொடர்பு கருவிகள் உட்பட, விமானங்களை கண்டறியும் ராடார் கருவிகளும் இந்த கட்டளை மையத்தில் பொருத்தப்பட்டிருந்ததாக அவை மேலும் தெரிவித்துள்ளன.அங்கு நவீன ஆயுதங்களும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி:ஈழம் ஈ நியூஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக