09 மார்ச் 2011
தமிழீழ போராளிகளின் நினைவகங்கள் அகற்றப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு!
தமிழீழ போராளிகளின் சிலைகள் மற்றும் துயிலும் இல்லங்கள் உடைத்து அகற்றப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகளை சேர்ந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் ,ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளன. இந்த நடவடிக்கையானது மனித உரிமை மீறல் என அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. தமிழீழ போராட்டத்தின் முக்கிய தலைவர்களான கிட்டு, சார்ள்ஸ் அந்தனி,சங்கர், திலீபன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகளை ஸ்ரீலங்கா படைகள் உடைத்து அப்புறப்படுத்தியிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக