12 மார்ச் 2011

ஸ்ரீலங்காவின் படைக்கட்டமைப்பை தகர்க்க சதியாம்!

வெளிநாடுகளும், சில அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்களும் சிறீலங்கா படைக்கட்டமைப்பை கலைத்துவிடுவதில் குறியாக இருப்பதாகவும், ஆனால் அதனை தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.
நேற்று (11) சிறீலங்காவின் அரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா படையினரின் கட்டமைப்பை குலைத்து அதனை பலவீனப்படுத்துவதன் மூலம், தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சில வெளிநாட்டு சக்திகளும், அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்களும் முயன்றுவருகின்றன.
ஆனால் எனது ஆட்சியில் அதனை மேற்கொள்ள இடமளிக்கமாட்டேன் என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவினர் என தெரிவித்து சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் வசிக்கும் தமிழ் மக்களின் வீடுகளில் கொள்ளைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான கொள்ளைகளை மேற்கொண்டுவரும் குழுக்களில் ஒரு குழுவினரை கொட்டகேனா பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் இன்று (12) தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக