03 மார்ச் 2011

அமெரிக்காவை கண்டிக்கிறது ஸ்ரீலங்கா!

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு சிறீலங்கா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் துணை வெளிவிவகார அமைச்சர் றொபேட் ஒ பிளேக்கின் எச்சரிக்கை கண்டிக்கத்தக்கது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் முன்னரே சிறீலங்காவில் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளனது.
சிறீலங்கா அரசு குற்றங்களை புரிந்துள்ளதாகவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீஸை அழைத்து பேசவுள்ளதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக