11 மார்ச் 2011

இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா உதவி.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அமெரிக்கா உணவு நிவாரணங்களை வழங்கியுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் தனது அபிவிருத்தி முகவர் நிறுவனமான யூஎஸ் எயிட் நிறுவனத்தின் ஊடாக இந்த உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இடம்பெயர் மக்கள் மீள் குடியேறுவதற்கு உதவியளிக்கும் நோக்கில் யூஎஸ் எயிட் நிறுவனம் 4.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் இந்த உதவிகளை மக்களுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
கோதுமை மா, பருப்பு, மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த உதவியின் மூலம் 371000 பேர் நன்மை அடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2010 மற்றும் 2011ம் ஆண்டின் முதல் மாதப் பகுதிகளில் அமெரிக்க அரசாங்கம் இலங்கையர்களுக்காக 33 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவு நிவாரணங்களை வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக