எம்.வி. சன் சீ கப்பல் மூலம் அகதி அந்தஸ்த்துக் கோரி பிரிட்டிஷ் கொலம்பியா ஊடாக கனடாவை சென்றடைந்த இலங்கை அகதிகள் பலருக்கு அகதி அந்தஸ்த்து கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சன் சீ கப்பலில் கனடா சென்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்தார்களா என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக கனேடிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த கப்பல் பயணிகளை மீளவும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியாத நிலைமை ஏற்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சன் சீ கப்பலில் சென்ற அகதி அந்தஸ்த்து கோரிக்கையாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் கனேடிய மத்திய அரசாங்கத்திற்கு பாதகமான நிலைமையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தமைக்கான வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் எவரையும் நாடு கடத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் இருந்தார்கள் என்பதற்கான அவர்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எனக் கூறமுடியாதென சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக