02 ஜூன் 2011

சுய நிர்ணயத்திற்கான வாக்கெடுப்பு இலங்கையில் நடத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர் சுயநிர்ணயம் வென்றெடுக்கச் சாதகமான பொதுசன வாக்கெடுப்பு ஒன்று இலங்கையில் நடாத்தக் கோரி மாபெரும் கையெழுத்துப் பிரச்சாரத்தை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஆரம்பித்துள்ளது.
தென் சூடானில் சமீபத்தில் ‘தென் சூடான் தனி நாடாகப் பிரிய வேண்டுமா அல்லது சூடான் நாட்டுடன் இணைந்து இருக்க வேண்டுமா’ எனக் கேட்டு ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட்டது. பிரிவதற்குச் சாதகமாக அமோக வாக்குகள் பதிவானதன் காரணமாக புதிய நாடு உதிப்பது சாத்தியமெனத் தோன்றுகின்றது.
தமிழீழத் தனி நாட்டை சாத்தியமாக்கவல்ல அதே போன்ற ஒரு பொதுசன வாக்கெடுப்பை வடக்கு, கிழக்கு இலங்கையில் நடாத்த அமெரிக்காவின் ஆதரவைக் கோரும் மனுவிற்கு கையொப்பங்கள் சேகரிக்கும் பிரச்சாரம் ஒன்றினை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஆரம்பித்துள்ளது.
வடக்கு கிழக்கு இலங்கைக்கும் தென் சூடானுக்கும் இடையில் கணிசமான ஒற்றுமை உள்ளது என்பதை எமது அமைப்பு நன்கு உணர்ந்துள்ளது. தென் சூடான், காட்டூமில் இயங்கும் சூடான் அரசால் பலவிதமான கொலைப் பாதகத்திற்கும் பல இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டது. இதே போல், வடக்கு கிழக்குத் தமிழர்களும் கொழும்பில் உள்ள சிங்கள அரசினால் அடக்கி ஒடுக்கப்பட்டு படுகொலைகளுக்கும் பல விதமான இன்னல்களுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
தென் சூடான் பொதுசன வாக்கெடுப்பு, வடக்கு, கிழக்கு இலங்கைக்கும் முன்மாதிரியாகப் பொருந்தும் என்பதால் நாம் ஜனாதிபதி ஒபாமாவை எமது கோரிக்கைக்கு ஆதரவு அளித்து முன்னெடுக்குமாறு கேட்டு நிற்கின்றோம்.
வடக்கு, கிழக்கு இலங்கையில் பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறுவதை ஆதரித்து தமிழுர்களும் தமிழர் அல்லாதோரும் கையொப்பமிட்டுள்ள மனுவை ஜனாதிபதி ஒபாமா அவர்களுக்குச் சமர்ப்பித்து எங்கள் எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும்படிதூண்டுவோம்.
அவர் ஆதரிக்கும் இன நீதி, சுயாட்சிக் கோட்பாடுகளுக்கு அமைவாயுள்ள காரணத்தினால் எம்மைப் போன்று அவரையும் இது ஈர்க்கும் என நம்புகின்றோம்.
இராஜாங்கச் செயலாளர் திருமதி. கிலின்;டன், ஐ. நா. சபைச் செயலாளர் நாயகம் திரு. பான் கி மூன,; ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் நிரந்தரத் தூதுவர்கள் ஆகியோர் அடங்கலாக வேறு சிலருக்கும் இம் மனுவை நாம் அனுப்பியுள்ளோம்.
ஏராளமான கையொப்பங்கள் வாயிலாக இந்தச் சாதாரண நியாயபூர்வமான பிரேரணைக்கு எத்தகைய ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்க முடியும்.
எங்கள் மனு தமிழ், ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு மொழிகளில் உள்ளது.
மனுவுக்கான மின் இணைப்பு: http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக