02 ஜூன் 2011

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்"மகிந்தவிற்கு எதிராக றொகான் அதிரடி!

உலக பயங்கரவாத ஆய்வு நிபுணரான பேராசிரியர் றொகாண் குணரெட்ண இலங்கையின் இறுதி யுத்ததில் பல ஆயிரம் அப்பாவி பொது மக்கள் கொல்லபட்டது ஏற்றுக்கொண்டார்.
இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கபட்டமை தொடர்பான உலக நாட்டு பிரதிநிதிகளுடனான மாநாட்டில் உரையாற்றும்போது குணரெட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்... நான் பிரபாகரனை சந்தித்திருந்தேன்.
நந்திகடலில் அண்மையில் போய் ஒரு இரவு தங்கி இருந்தேன். பல ஆயிரம் தமிழ் மக்களை பேட்டி கண்டேன். வன்னியில் கடமையாற்றிய புலிகளின் மருத்தவர்கள், பிரேத பரிசோதகர்கள், பிரேத சுத்திகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆயிரம் பேர் சரணடைந்த விடுதலைப் புலி போராளிகள் உட்பட பல பேரை பேட்டி கண்டேன்.
கடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டதை கூட நான் புலி போராளிகளுடன் அவர்களின் புனர்வாழ்வு முகாமில் கொண்டாடினேன். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வன்னி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் சாகவில்லை என சொன்னது முழுப்பொய்.
வன்னி யுத்தத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லபட்டமையே உண்மை என்று தெரித்தார். பேராசிரியர் றொகான் குணரெட்ண இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கபட இருந்தார்.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொய் சொல்லுகிறார் என அரசாங்கத்தின் குட்டை போட்டுடைத்து, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாய ராஜபக்ஷவின் முதுகில் குத்திவிட்டதாக இலங்கை பாதுகாப்பு துறை வட்டாரங்கள் இவர்மீது ஆத்திரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக