01 ஜூன் 2011

காயப்பட்ட பெண் போராளிகளை இறந்த உடல்களுடன் தூக்கி வீசும் கொடூரம்!

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி எதிர்வரும் 14ம் திகதி புதிய யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிடவுள்ளது.
போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போடும் கொடூரக் காட்சிகள் அடங்கிய காணொளியை சனல் 4 வெளியிடவுள்ளது.
இம்மாதம் 14ம் திகதி வெளியிடவுள்ள புதிய யுத்தக்குற்றக் காணொளி வெளியீடு சுமார் 1 மணித்தியாலம் நடைபெறவுள்ளது. இந் நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மனிதஉரிமை பேரவையின் கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக