இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்கும் போராட்டம் அமெரிக்க மற்றும் பிரிட்டனின் 22 நகரங்களில் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை மேற்படி போராட்டம் நடந்துள்ளது. கலிபோர்னியாவில் Gap மற்றும் Victoria வணிக நிலையங்களின் முன்னால் ஸ்டான்ஃபோர் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் இப்போராட்டத்தில் இணைந்தமை முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயமாகும். இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதுமுள்ள மாணவர்களும் இப்போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்தனர்.
இலங்கையிலுள்ள இன அழிப்பு நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் புறக்கணிக்குமாறும் வலியுறுத்தும் விதமாக இப்போராட்டம் நடைபெற்றதாக அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழு விட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கக்கேடான மனித உரிமைகள் நிலைப்பாட்டையும் இரத்தம் தோய்ந்த இன அழிப்புக் கொள்கைகளையும் கொண்டுள்ள நாடுகளில் தமது வணிகங்களைச் செய்யும் நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டியது உலகிலுள்ள அனைத்து மக்களும் தவிர்க்க முடியாதது என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகை கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் இலங்கையிலுள்ள மனித உரிமைகள் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆகும். ஆடை உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்குக் கிடைத்துவந்த வருமானம் தற்போது 500 மில்லியன் டொலர்கள் இழப்பைச் சந்திக்கிறது என்று உள்ளூர் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதத்துடன் பிரிட்டிஷிலுள்ள NEXT இலங்கையுடன் தான் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை நிறுத்தியுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பிற நாடுகளிலுள்ள 22 நகரங்களிலும் இலங்கை ஆடைகளைப் புறக்கணிக்கும் பிரச்சாரங்கள் முதன்மை பெறத் தொடங்கியுள்ளன.
30 செப்டம்பர் 2010
உலகத் தலைவர்கள் மகிந்தவை மதிக்கவில்லை: சிங்கள ஊடகம்.
உலகத் தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மதிக்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகளின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதியை, உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை எனவும் சிங்கள இணைய தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு இதுவரை காலமும் காணப்பட்ட நற்பெயருக்கு தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையினால் நடத்தப்பட்ட விருந்துபசாரத்திற்கு 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ஒரு நாட்டுத் தலைவரே இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மோசடியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈரானிய ஜனாதிபதி முஹமட் அஹமட்நிஜாடீன் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். ஈரானிய அமைச்சரும் குறித்த வைபவத்தில் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் நட்புறவு நாடுகளெனத் தெரிவிக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இலங்கை ஒழுங்கு செய்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் வாழும் அரசாங்கத்திற்கு சார்பான இலங்கையர்கள் பங்கேற்கும் ஒர் நிகழ்வாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு மாற்றமடைந்தததாகவும், கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் செயலளாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பதற்கு இலங்கை கடுமையான முயற்சி மேற்கொண்டு இறுதியில் வெற்றியடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
பராக் ஒபாமாவின் உரையின் போது நிரம்பி வழிந்த சபை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போது பல இருக்கைகள் காலியாக இருந்ததென குறித்த சிங்கள இணைய தளம் சுட்டிக்காட்டியள்ளது.
ஜனாதிபதியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்குக் கூட பல அரச தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு அனுப்பவிருந்த வெடிமருந்தா கரடியனாறில் வெடித்தது?
கடந்த 17 ஆம் திகதி கரடியனாறு போலீஸ் நிலையத்தில் தரித்துநின்ற இரு டைனமைட் வெடிமருந்துக் கொள்கலன்கள் வெடித்ததில் 27 பேர் கொல்லப்பட்டதும் பலர் காயப்பட்டதும் தெரிந்ததே. இந்த வெடிமருந்துகள் ஒலுவில் ஊடாக பாகிஸ்தானினுள்ள லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தினருக்கு அனுப்பப்படவிருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்தக் குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த கீழ்நிலை போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் அறியப்பட்டுள்ளது.
இலங்கையில் வைத்தே லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், ஏற்கனவே 100 இயக்கத்தினர் இலங்கையில் உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினர் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறான ஒரு செய்தி கசிவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்காவின் இக்குற்றச்சட்டை கோத்தபாய மறுத்திருந்தார்.
இதேவேளை இலங்கையைப் பயன்படுத்தி இந்தியாமீது தாக்குதல் தொடுக்க சீனா முயல்கிறது. இலங்கையுடன் சீனா கொண்டுள்ள தொடர்புக்கு இந்தியா வெளிப்ப்டையாகவே வருத்தம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எந்த நாட்டிலிருந்து தனக்கு அதிக ஆதாயம் கிடைக்கிறதோ அந்த நாட்டுக்கு இலங்கையை விற்க மஹிந்த தயாராக இருப்பதன் விளைவே இப்போது லஷ்கர் ஈ தொய்பாவினரும் இலங்கைக்குள் ஊடுவக் காரணமாகிவிட்டதாக அரசியல் அவதானிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

29 செப்டம்பர் 2010
புலிகள் உறுப்பினர் 17பேருடன் பசுபிக் கடலில் மிதக்கும் தோணி.
விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் 17 பேரைக் கொண்ட சிறிய ரக தோணி ஒன்று பசுபிக் பெருங்கடலில் பல நாட்களாக பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. "பாலா" என்று அழைக்கப்படும் கடத்தல் காரர்களின் உதவியோடு இத் தோணி பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தமக்கு புலனாய்வுச் செய்திகள் கிடைத்திருப்பதாக மேலும் அது தெரிவித்துள்ளது. சிறிய ரக மரத்தால் ஆன தோணி என்றபடியால் அது கடலைக் கடக்க கஷ்டப்படுவதாகவும் விரைவில் அது ஒரு நாட்டைச் சென்றடையும் எனவும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.
பாலா என்றழைக்கப்படும் கடத்தல் காரர்கள் தற்போது இந்தியாவில் இருந்து இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்து ஊடாக மக்களைக் கடத்தும் ஒரு அமைப்பாக மாறிவருவதாக அறியப்படுகிறது. இவ்வமைக்கு குறித்து மேலதிக தகவல்கள் எதனையும் அதுவெளியிட மறுத்துள்ளது.

அல்பிரட் துரையப்பா படுகொலை:புலிகள் செய்யவில்லை! 35 ஆண்டுகளின் பின் உண்மை அம்பலம்: திவயின!
35 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ். மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் படுகொலைச் சம்பவம் குறித்த உண்மை அம்பலமாகியுள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரசபையின் மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருத்துக்களை வெளியிட்ட ஆங்கில இணையதளமொன்றின் (ஏசியன் ட்ரிபியூன்) ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அல்பிரட் துரையாப்பாவை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமர்தலிங்கத்தின் மூத்த மகன் காண்டீபன் அமர்தலிங்கமே படுகொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமிர்தலிங்கத்திற்கும் இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஆர்.சுந்தரலிங்கம் தெரிவித்திருந்ததாக ராஜசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
காண்டீபன் அமிர்தலிங்கம் தனது தாயாரான மங்கையற்கரசி அமிர்தலிங்கத்துடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து, லண்டன் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 35 ஆண்டுகளாக இந்தப் படுகொலைச் சம்பவத்தை பிரபாகரன் மேற்கொண்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய கே.சுந்தரலிங்கம் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாதாரண கைதிகள்போல் புலிகளை நடத்த முடியாதென்கிறது சிங்களம்.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சாதாரண கைதிகள் போல நடத்த முடியாது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப அபயவர்த்தன பி.பி.சி க்குத் தெரிவித்துள்ளார். அவர்களை சாதாரண சட்டத்தின் கீழுள்ள குற்றவாளிகள் போல நடத்தமுடியாது என்பதை எந்தவொரு நாடுமே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் ஏராளமான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்று இந்தவார ஆரம்பத்தில் சர்வதேச நீதியாளர்கள் சபை தெரிவித்திருந்தது. இலங்கை மனித உரிமை நிலவரத்தை மேம்படுத்தும்படி இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று நிதிவழங்கும் நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையையும் இச்சபை வலியுறுத்தியுள்ள நிலையில் யாப்ப இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகள் பற்றிய முக்கிய தகவல்களைத் தந்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ள யாப்ப, தமது நாடு ஒரு சுதந்திர நாடு என்றும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு தாங்கள் அடிபணியப் போவதில்லை என்றும் மேலும் கூறியுள்ளார்.
யாப்பவின் இக்கருத்தை எதிர்க்கட்சியான ஐ.தே.க இன் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவும் ஏற்றுக்கொள்வதாக பி.பி.சி இடம் கூறியுள்ளார். இறைமையுள்ள ஒரு நாட்டின்மீது சர்வதேச அமைப்புகள் தமது நிபந்தனைகளைத் திணிக்கக் கூடாது என்று அவர் சொன்னார். இதேவேளை, கே.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்களை ஒருவிதமாகவும் தடுப்புக் காவலிலுள்ளவர்களை ஒருவிதமாகவும் அரசு நடத்துவதைத் தம்மால் ஏற்க முடியாது என்றும் அனைவரையும் ஒரே போல நடத்த வேண்டும் என்றும் கரு ஜெயசூரிய கூறியதாக பி.பி.பி செய்தி தெரிவிக்கிறது.

சிங்கள காமவெறிபிடித்த பொலிஸாராலேயே இளைஞர் கொலை!
காத்தான் குடி பிரதேசத்தில் வைத்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்ட ஆண் ஒருவர் உண்மையில் காவற்துறை அதிகாரி ஒருவரால் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு காத்தான்குடி, கல்லடி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி சுருக்கிட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டதாக காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.
எனினும் நீதி விசாரணைகளோ அல்லது பிரேத பரிசோதைனயோ மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்வராசா சங்கர் என்ற 26 வயதுடைய குறித்த ஆணின் மனைவியின் மீது இச்சை கொண்டிருந்த அந்த பிரதேச காவற்துறை அதிகாரி ஒருவரே அவரை கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்லப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியான செல்வராசா சங்கர் ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆவார்.

28 செப்டம்பர் 2010
சந்திரசூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையோ அதேபோல் தேசியத்தலைவர் இருப்பதும் உண்மை!
சந்திர சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார்.
புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும் என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.
இன்று காலை 9.30 முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது.
தமிழக கல்லூரி மாணாக்கர் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அய்யா பழ.நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் மாணவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசியத் தலைவரது இருப்பு தொடர்பாக மாணவர் ஒருவர் வினவியபோது பதிலுரைத்த நெடுமாறன் அய்யா இத்தகவலை உறுதிபடத் தெரிவித்தார்.
சந்திர சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. ஐந்தாம் கட்ட ஈழப்போரிற்கான தயாரிப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தலைவர் பிரபாகரன் அவர்கள் விரைவில் வெளிப்படுவார். ஈழப்போரை தலைமைதாங்கி முன்னெடுத்து தமிழீழத்தை அமைப்பார் என உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எப்போது எப்படி வருவார் என்பது அவருக்கு மாத்திரமே தெரிந்த இரகசியமாகும் எனத் தெரிவித்தார்.
இக் கருத்தரங்கில் பெங்களுரைச் சேர்ந்த பேராசிரியரும் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் சிங்கள அரசை போர்க்குற்றவாளியாக ஏன் அறிவிக்க வேண்டும் என வாதாடி தமது கருத்துக்களை பதிவு செய்தவர்களில் ஒருவருமான முனைவர்.பால் நியூமன் அவர்களும் சமூகப் போராளியும் வழக்கறிஞருமான பாண்டிமாதேவி அவர்களும் மாணவர்களுக்கு கருத்துரையாற்றினார்கள்.

மன்னார் பேசாலை கடற்கரைப் பகுதியில் உருக்குலைந்த ஆணின் சடலம் மீட்பு!
மன்னார் பேசாலை நடுக்குடா கடற்கரையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டு, நேற்று திங்கட்கிழமை மாலை பேசாலை பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சடலத்தின் தலைப்பகுதி மற்றும் கால் பகுதிகள் சிதைவடைந்த நிலையில் உள்ளது. இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை. இதே வேளை கடந்த ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளிக்கு பின்புறமாக கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதவான் குடிபோதையில் பெண்கள் விடுதியில் புகுந்து அட்டகாசம்!
அதிக குடிபோதையில் இருந்த நீதவான் விடுதியில் பணியாற்றும் இளம்பெண்களின் ஓய்வறை, எங்கே இருக்கிறது என்று மோப்பம் பிடித்து அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார். கடமையிலிருந்த பாதுகாப்பு ஊழியர்களை இதனைத் தடுக்க முயற்சித்தபோது ஏற்பட்ட வாய்த்தரக்கத்தினால் ஆத்திரமடைந்த நீதவான், தான் ஒரு நீதவான் என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் எனவும் கூறி அந்த ஊழியர்களைத் தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து நீதவான் களியாட்ட விடுதிக்கு வெளியே வந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சூடு நடத்தி அந்த ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக குறித்த களியாட்ட விடுதி முகாமைத்துவம் கொள்ளுப்பிட்டி காவல்துறையில் முறைப்பாடு செய்து சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினருக்கு அந்த நீதவான், ஜனாதிபதியுடன் தமக்குள்ள உறவைத் தெளிவுபடுத்தினாராம் ! அவ்வாறு கூறிக்கொண்டு தாமும் தன்னுடன் வந்த சக நீதவான்களையும் அழைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தபோது, காவல்துறையினர் அவர்களை பலவந்தமாக கொள்ளுப்பிட்டி காவல்நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போது காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளிக்கவும் நீதவான்கள் மறுத்துள்ளனர்.
தற்பாதுகாப்புக்காக நீதவானுக்கு வழங்கப்பட்டிருக்கும் துப்பாக்கியைக்கூட இவர்கள் இவ்வாறான ஈனச்செயலுக்காக துஷ்பிரயோகம் செய்துள்ளமை மிகவெட்கப்படவேண்டிய ஒருவிடையம். இவர்கள் போன்றோரிடம் இருந்து மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைத்திருக்கும்?

கிழக்கில் முஸ்லீம்கள் தமிழர்களின் காணியை சுவீகரிக்க பிள்ளையான் உதவுவதாக மக்கள் விசனம்.
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்காக ஈரான் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடமைப்புத் திட்டமொன்றுக்கு அப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான தமிழர்கள் தமது எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களின் காணிகளில் முஸ்லிம்களுக்காக ஈரானின் உதவியுடன் 70 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என ஆரையம்பதி பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் செயலாளரான மகேந்திரலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்
ஏற்கனவே தமது பிரதேசத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் காரணமாக தமிழ் கிராமங்களுக்கிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆரையம்பதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
இந்த குற்றச்சாட்டை மகளிர் மற்றும் சிறுவர் விவகார துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுக்கிறார்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான மற்றும் பள்ளிவாசலுக்குரிய காணிகளிலேயே இந்த வீடுகள் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இது தொடர்பாக கருத்துரைக்கையில் “வீடமைப்பு திட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒரு சாரார் இதனை நிறுத்தக் கோருவது கவலைக்குரியது” என்றார்.
பிள்ளையான என்றால் இப்படிச் சொல்ல மாட்டார். முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனே இவ்வாறு அரசிற்கு சோரம் போவதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.

27 செப்டம்பர் 2010
40 ஆயிரம் பேர் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சம்பவம் எங்கேயும் நிகழ்ந்ததுண்டா?
லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா அரங்கில் மத்திய, மாநில அரசுக ளின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.
அவர், ’’ உலகில் தமிழன் நாதியற்றவனாகி விட்டான். இந்திய தேசிய இனங்களில் தமிழனை தவிர வேறு மொழிக்காரர்கள் இலங்கையில் அழிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவை இந்த உலகமே கண்டிருக்கும்.
வெள்ளை கொடி ஏந்திவந்த தமிழர்கள் ஈவு, இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்தது உண்டா?’’என்று பேசினார்.
அவர் மேலும், ‘’தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட முழுஅளவில் முன்வரவில்லை. மக்களி டமும் போராட்ட குணம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆண் கள் மதுப்பழகத்திற்கும், பெண்கள் டி.வி. சீரியல் களுக்கும் அடிமையாகி விட்டனர். இதன் மூலம் அவர்கள் கலாச்சார சீரழிவுக்கு இழுத்து செல்லப்படுகிறார்கள்.
லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியாக பதிவு பெற்றுள்ளது. கட்சி அங்கீகாரம் பெற்றவுடன் கூட்டணி வைப்போம். வரும் தேர்தலில் வாக்கு எந்திரத்தை பயன்படுத்த கூடாது. அதன் மூலம் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாமல் போய்விடும். ஜனநாயகமும் கேள்வி குறியாகிவிடும்.
எனவே மீண்டும் தமிழகத்தில் வாக்குச்சீட்டு முறையினை அமல்படுத்த வேண்டும். அதற்கு எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்’’என்று பேசினார்.

சிறீலங்கா மீது பராக் ஒபாமா கடும் தாக்கு?
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா சிறீலங்கா அரசை கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால் சிறீலங்கா அதற்கான பதிலை தனது உரையில் சேர்க்காது தவிர்த்துவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஓபாமாவின் பேச்சில் பின்வரும் விடயங்கள் இருந்ததாக பார்வையாளர் தெரிவித்துள்ளனர்.
தற்போது பொருளாதார நெருக்கடிகள் எமக்கு சுமையாக உள்ளபோதும், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளும் எமக்கு அச்சத்தை கொடுக்கின்றன. இன்று பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் அதற்காக நாம் மனித உரிமைகளை புறம்தள்ள முடியாது.
குறுகிய கால உறுதித்தன்மைக்காகவும், பொருளாதார நலன்களுக்காகவும் சுதந்திரத்தை விலையாக்க முடியாது.
சில நாட்டின் தலைவர்கள் தமது பதவிக்காலத்தின் எல்லைகளை இல்லாது செய்துள்ளனர். சிவில் நிர்வாகம் சீரழிந்துபோவதை நாம் காண்கிறோம். நல்லாட்சி அற்ற நிலையையும், ஊழல்களையும் நாம் காண்கிறோம். ஜனநாயகம் காலவரையறையின்றி குழிதோண்டி புதைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.
அமெரிக்காவிலும் சில தவறுகள் இருந்தாலும், வெனிசுலா அதிபர் கியூகோ சவேஷ் இதனை மேற்கொண்டுள்ளார். உகண்டா அதிபர் முசேவெனி அதனை மேற்கொள்ள முயலுகிறார் (பதவிக் காலத்தை அதிகரிக்க), சிறீலங்காவை பொறுத்தவரையில் நாம் தற்போது காணுவது அண்மைய நிகழ்வு என ஒபாமா தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஒபாமாவுக்கு பின்னர் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தும் ஒபாமாவின் பேச்சுக்கு பதில் கொடுக்க சிறீலங்கா தவறிவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்காவுக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவம்.
இன்னமும் எதிர்க்கட்சி பக்கமே உள்ள ஸ்ரீரங்காவுக்கு அரச தரப்பு கொடுத்துவரும் முக்கியத்துவம் சகலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தற்போது நியூயோர்க் சென்றுள்ள இலங்கைக் குழுவிலும் ஸ்ரீரங்கா இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவரது மகன் நாமலுக்கு அருகிலேயே செல்லுமிடமெங்கும் திரிகிறார் ஸ்ரீரங்கா. ஐ.தே.க கட்சி சார்பில் சென்றுள்ள தலைமை கொரடாவான ஜோன் அமரதுங்கவை நியூயோர்க்கில் நடக்கும் அரச தலைவர்களுடனான சந்திப்புகளில் காணவே முடியவில்லை. அந்தளவுக்கு ஸ்ரீரங்காவிற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
ஈரான் அதிபர், நோர்வே பிரதமர் மற்றும் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் மஹிந்த நடத்திய பேச்சுக்களிலும் ஸ்ரீரங்கா பிரசன்னமாகியிருந்தார். எனவே புதிய தமிழர்களை தனது அரசில் நுழைப்பதற்கான புதிய திட்டத்துடன் மஹிந்த செயற்பட்டு வருவது தெரிகிறது. ஆனால் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்த டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு இவ்வாறான ஒரு முக்கியத்துவமோ அதிகாரமோ என்றும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களை அரசு தற்போது புறந்தள்ளி வருவதும் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷவுடனும் ஸ்ரீரங்கா கூட்டாகச் சென்று அங்கு நடந்த பல நிகழ்வுகளில் முன்னின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. இதற்கிடையில் வருகின்ற நவம்பர் மாதம் அமையவுள்ள புதிய பாராளுமன்றில் ஸ்ரீரங்காவுக்கு இதே முக்கியத்துவம் வழங்கப்பட்டு நல்லதொரு பதவியும் ஒதுக்கப்படும் என்று அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

கனடிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த மரம் நடுகை நிகழ்வு.
உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளான செப் 26 திகதி கனடா தமிழ் இளையோர் அமைப்பு மரம் நடுதல் என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தது
திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினைவு தினத்தை முன்னிட்டு ரொரண்டோ மாநகரில் தமிழ் இளையோர்களின் உதவியுடன் பல மரங்கள் நடப்பட்டு பூமித்தாய்க்கு கையளிக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் தமிழ் இளையோர் பலர் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்தை நெஞ்சில் தாங்கியவாறு பங்கெடுத்திருந்தனர்,
திலீபன் அண்ணா அவர்களின் தியாகத்தை வேற்று இன மக்களுக்கு எடுத்துரைத்தவாறு மரம் நடுகை நிகழ்வை நிறைவு செய்தனர்.

26 செப்டம்பர் 2010
ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம்-வைக்கோ.
விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டதாக கூறுபவர்கள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு மீதான தடையை நீட்டிப்பது ஏன்? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் ஓவியர் புகழேந்தியின் போர் முகங்கள் என்ற ஓவிய கண்காட்சி நடந்து வருகிறது. இதை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓவியர் புகழேந்தி உலகின் மிக சிறந்த ஓவியர் ஆவார். இந்த ஓவியங்கள் இலங்கை தமிழர்கள் இந்திய அரசு உதவியோடு வல்லரசு உதவியோடு கொல்லப்பட்டதை உலகுக்கு உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. இதை பார்த்தால், ஈழத்தமிழர்கள் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த ஓவியங்கள் மூலம் தமிழ்ஈழ ஆதரவை ஏற்படுத்த வேண்டும்.
23 வருடங்களுக்கு முன் அதே நாளில் திலீபன் இறந்தார். அந்த ரத்தம் உறையவில்லை. விடுதலை புலிகளின் எண்ணம் வீண் போவது இல்லை. தமிழ் ஈழம் அமைத்தே தீரும்.
தற்போது இலங்கை அரசு தமிழர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முயன்று வருகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்கள் பகுதியில் உள்ள இந்து சிவன், முருகன் கோவில்களில் புத்தர் சிலையை வைத்து வருகின்றனர். இதன்மூலம் ஈழத்தமிழர்கள் வாழ்ந்த இடத்தை அழித்து இலங்கை தீவாக மாற்றும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் விடுதலைப்புலி இயக்கத்துக்கு மீதான தடையை மட்டும் நீட்டிப்பது ஏன்?
இதுகுறித்தான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நான் வாதாடினேன். இந்த தீர்ப்பாயத்தில் மத்திய அரசு மூலம் தமிழக அரசு சார்பில் அரசிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்துடன் தமிழ்நாடும் ஒரு பகுதி என்று கூறியுள்ளனர். எனவே தமிழ் ஈழம் அமைந்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்கள். இது பச்சை துரோகம்.
விடுதலைப்புலிகள் எந்த ஒரு தீர்மானத்திலும் எந்த ஒரு பகுதியிலும் தமிழ் ஈழத்தின் ஒரு பகுதி தமிழ்நாடு என குறிப்பிடவில்லை.
இலங்கை தமிழர்கள் அனைவருமே விடுதலைப்புலிகள் என நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் எங்கும் செல்ல முடியவில்லை. இதனால் ஈழத்தமிழர்கள் உலக அனாதையாகி விட்டார்கள்.
விடுதலைப்புலி மீதான தடையை நீக்கினால், ஈழத் தமிழர்கள் இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து உலகுக்கு வெளிபடுத்துவார்கள் என்பதால் தடை நீடிக்கிறது. தனி ஈழம் அமைந்தே தீரும் ராஜபக்சேவை போர் குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம் என்றார்.

இச்சிறுவனை தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளவும்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநலப்பிரிவில் 12.08.2010 அன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றக் கட்ட ளையின் பிரகாரம் உளநல சிகிச்சைக்காக 13 வயது முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து கொண்டு வந்ததாக கருதப்படும் இவர் தனது பெயரை மட்டும் லக்ஸன் எனக் கூறிக் கொள்ளும் இவ்வேளையில் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தி வருவதனால் தமிழ் சிறுவனாக கருதப்படுவதுடன் இவர் தொடர் பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
எனவே இவருடன் தொடர்புடையவர்கள் 0212263261, 0212263262 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வைத்திய அத்தியட்சகருடன் தொடர்புகொள்ளுமாறு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.பத்மநாதன் கேட்டுக்கொள்கிறார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமெரிக்கா ஆப்பு: மறுபக்கம் தேளும் கொட்டியது.
ஓசியாக அமெரிக்கா செல்ல பெரும் எதிர்பார்ப்போடு இருந்த டக்ளசுக்கு விசா வழங்க இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைப் பெரிதுபடுத்தினால் எங்கே இணையத்தளங்களில் இது பெரும் செய்தியாக வந்துவிடும் என அடக்கி வாசித்திருக்கிறார் டக்ளஸ். யாழில் தங்கியிருந்து வேலைசெய்துவரும் இவர், தனது விசா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக வாயே திறக்கவில்லை, அதனை கஷ்டப்பட்டு மறைக்க அது பெருவினையாக உருவெடுத்துள்ளது.
பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் அமெரிக்கா செல்லவிருப்பதாக அறிந்த பிரதமர், அவர் நாட்டில் இல்லாதவேளை பிரதி அமைச்சர் அப்பொறுப்பில் இருக்கவேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன, வீரக்குமார திஸாநாயக்காவை பிரதி அமைச்சராக நியமித்து, சத்தியப் பிரமாணத்தையும் எடுக்கவைத்துவிட்டாராம். இது டக்ளசுக்கே இப்பதான் தெரியுமாம். தனது அமைச்சுப் பொறுப்புக்கு பிரதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பாக டக்ளஸ் கடும் அதிருப்தியடைந்துள்ளாராம்! அமெரிக்க விசாவும் கிடைக்காமல், இப்ப பிரதி அமைச்சர் நியமனம் என்று, இருபக்க அடி வாங்கியுள்ளார் டக்ளஸ்.

25 செப்டம்பர் 2010
மாவீரர்களின் இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் - தமிழீழ விடுதலைப் புலிகள்.
உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையாளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என அனைத்துலகத் தொடர்பகம் - தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
26/09/2010
தமிழீழம்
எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே!
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் வழியில் தொடர்ந்து போராடுவோம்
இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்பு தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகக் காலி முகத் திடலில் நடந்த சத்தியாகத்துடன் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போர் ஆரம்பிக்கிறது. காடையர்களின் தாக்குதலில் அன்று தமிழன் சிந்திய குருதி இன்று கண்ணீராகப் பாய்கிறது.
திலீபன் என்பது காலம் காலமாக இடைவெளியின்றித் தொடரும் போர்முறை. இதனால் எமது விடுதலைப் போர் தடங்கலின்றித் தொடரும் ஈழத்தமிழர் வாழ்விலும் உணர்விலும் தடுமாற்றமும் தளம்பலும் நிலவுகின்றன. எதிர்காலம் பற்றிய திகைப்பும் அச்சமும் எம்மைப் பீடித்துள்ளன சொந்த மண்ணை இழந்து எதிலிகளாக நாடு கடந்து நாடு தாவி அலைகிறோம்.
உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்துவ அடையா ளங்களை நாம் பேணிக் காப்பாற்ற வேண்டும் அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக் கூடாது உரிமையுடன் வாழ வலுவான போர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும்.
போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் எமது விடுதலைத் தாகம் எமக்குத் துணை நிற்கும் சவால்கள் நிறைந்த காலகட்டம் என்பது உண்மை சாவல்களைச் சமாளிக்கும் வலுவாய்ந்த ஆற்றல் எமக்கு இருப்பது அதினிலும் உண்மை.
எமது குரல் வலுவடைய வேண்டும் எமது கவன ஈர்ப்புப் போராட்டங்கள், பிரசார உத்திகள், கருத்துப் போர்கள், எமது இனக் கோரிக்கையை வலுப்படுத்தும் வழித் தடங்கள் கூர்மை பெற வேண்டும் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் பெயரால் நாம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் நிட்சயம் வெற்றி ஈட்டித்தரும்.
திலீபன் ஈழத்தமிழர்களின் போர் முறை பொது மானுடத்திற்கும் பொருத்தமான விடுதலை வழிகாட்டியாக அது இடம்பெறுகிறது. திலீபன் ஒரு சொல் மாத்திரமல்ல அது நலிவுற்ற இனங்களின் ஒட்டுறவாலும் இன்ப துன்பங்களாலும் உருவாக்கப்பட்ட உறுதியான விடுதலை பாதை.
சத்திய விரதம் மேற்கொண்டு வீர வரலாறாகிய தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் எமது மாவீரர்களின் இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

பிள்ளையானை உயிருடன் 'புதைக்க' குழி தோண்டும் அரசு.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணாவுடன் சேர்ந்து விலகிவந்து, பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியுள்ள பிள்ளையான் இடைக்கிடை அரசாங்கத்துடனும் முறுகியதுண்டு. அரசும் தனக்கு தேர்தல் வேலைகளில் உதவி தேவைப்படும்போது மட்டும் பிள்ளையானைப் பயன்படுத்தி வந்தது. ஆனால் இப்போது பிள்ளையானை உயிருடன் 'புதைக்க' குழி தோண்டும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைக்காக பிள்ளையான் எவ்வழிகளில் நிதியைத் திரட்டுகிறார் என்று விசாரணை செய்யுமாறு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதேவேளை பிள்ளையானின் நிர்வாகத்தின்கீழ் நடந்த லஞ்சம் மற்றும் மோசடிகளையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. எனவே இவ்வழிகளின்மூலம் பிள்ளையானின் முதலமைச்சர் பதவியை அரசு பிடுங்க முனைகின்றது.

இலங்கை போர்க் குற்ற விசாரணை அவசியம் - அமெரிக்க பல்கலைக்கழகம்.
இறுதிக்கட்டப் போரில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரணை செய்யவேண்டும் என்றும் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது. போர்க்குற்ற விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். வெளியாரின் தலையீடு எதுவுமின்றி தமிழ் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கவேண்டும் என்று அப்பல்கலைக்கழகம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைப் படையினரே போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் தமிழ் இன அழிப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இலங்கை அரசோ நியாயத்தை வலுப்படுத்துவதற்கு முயற்சி செய்வதை விடுத்து மனித உரிமை மீறல்களைப் புரிந்தோரை அடையாளம் காணும் முயற்சிகளைத் தொடர்ந்தும் தடுத்து வருகின்றது என்றும் அவ்வறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
தமது படைகள் ஆயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்களைக் கொலை செய்ததை வெளிக்காட்டிக் கொள்வதில் ஆர்வம் செலுத்தாத அரசு விடுதலைப் புலிகளைக் குற்றவாளிகள் எனக் காண்பிப்பதில் ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள அறிக்கை, இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவும் அரச படைகளுக்கு ஆதரவாகவே செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு பற்றியும் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை, ஆரம்பத்தில் இந்நிபுணர் குழு தமது விசாரணையைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது கொழும்பு அந்நிபுணர் குழு தனது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடைசெய்துவிட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க, நீதிமன்றத்தில் இந்திய அரசு கூறி உள்ள காரணங்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை குறித்து அமைக்கப்பட்டு உள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித்சென் அவர்களின் தீர்ப்பு ஆயத்தில், இந்த விசாரணையில் தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வைகோ நேற்று (24.9.2010) காலை பத்து மணி அளவில், ஒரு மிக விரிவான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். அதில், (குற்றம் சாட்டுகிறேன்) என்று அவர் வெளியிட்டு உள்ள ஆங்கில நூலையும் இணைப்பாகச் சேர்த்து இருந்தார்.
நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் கொடுத்த வாதத்தை, வைகோ, நீதிபதி முன் வைத்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் பிரிவு 9 ஐச் சுட்டிக்காட்டி, அத்துடன் இந்தச் சட்டத்தின் 35, 36 ஆகிய பிரிவுகளையும் மேற்கோள் காட்டி, அந்த
36- ஆவது பிரிவின் கீழ், இதனால் பாதிக்கப்படுகின்ற யாரும் முறையிடலாம் என்ற அடிப்படையில், தன்னையும் இந்த விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் நடவடிக்கைகளும், வைகோவின் பேச்சுகளும் மேற்கோள் காட்டப்பட்டு, 98 ஆம் ஆண்டு, தடை உத்தரவிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு முறை தடையை நீட்டிக்கும்போதும் தன்னுடைய பேச்சுகளைக் காரணமாகக் காட்டி இருக்கிறார்கள். எனவே, தான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில், தன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று சொன்னார்.
உடனே நீதிபதி; ‘விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களே, நீங்கள் ஏன் உறுப்பினராகச் சேரவில்லை?’ என்று கேட்டார். ‘நான் உறுப்பினராகச் சேரவில்லை. ஆனால், அவர்களுடைய தமிழ் ஈழக் கோரிக்கையைத் தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறேன். அவர்களது இயக்கத்தையும் ஆதரித்து வருகிறேன்’ என்றார் வைகோ.
உடனே அரசாங்க வழக்கறிஞர், ‘வைகோ, அந்த அமைப்பின் உறுப்பினராகவோ, அதிகாரபூர்வ பிரதிநிதியாகவோ இல்லை. அதனால், அவர் தரப்பு வாதத்தை, இந்த வழக்கில் அனுமதிக்கக் கூடாது’ என்றார். ஆனால், வைகோவின் தரப்பு வாதத்தைத் தொடர்ந்து எடுத்து உரைப்பதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
தொடர்ந்து வைகோ பேசும்போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிப்பதற்கு, இந்திய அரசு தற்போது தந்து உள்ள காரணங்களுள், முதலாவது காரணமே, மிகவும் தவறானதும், உண்மைக்கு முற்றிலும் புறம்பானதும் ஆகும். விடுதலைப்புலிகள், உலகத்தில் உள்ள எல்லாத் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து, தனித் தமிழ் ஈழ நாடு கோரிக்கை வைத்து உள்ளதால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று இந்திய அரசு குறிப்பிட்டு உள்ளது.
மாண்புமிகு நீதிபதி அவர்களே, இந்தப் பிரச்சினையில் உண்மையை எல்லோரும் உணர்வதற்கு, இதுவே எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்து உள்ளது. தமிழ் ஈழம் என்பது, இலங்கைத் தீவில் உள்ள வடக்கு,கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம். வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து, அவர்கள் அரசு ஆண்ட பூமி.
உடனே நீதிபதி கேட்டார்: அப்படியானால், அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதியைச் சேர்க்க விரும்பவில்லையா?
வைகோ: ஒருக்காலும் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு அங்குல இடத்தையாவது அவர்கள் சேர்த்துக் கொள்ள விரும்பினார்கள் என்பதற்கு, இந்திய அரசு ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா? இது விடுதலைப்புலிகள் பற்றி ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்த, இந்திய அரசு செய்கின்ற, திட்டமிட்ட நச்சுத்தன்மை வாய்ந்த பிரச்சாரம் ஆகும்.
நான் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்கள் குறிக்கோள். நீதிபதி அவர்களே, பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, ‘வங்கதேசம்’ என்று ஒரு தனிநாடு அமைக்க, அந்த மக்கள் போராடியபோது, மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகளும், அதே வங்கமொழி பேசுகிறவர்கள்தான், பழக்கவழக்கங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒன்றுதான், ஆனால், மேற்கு வங்காளத்தையும் சேர்த்து, அகன்ற வங்கதேசம் கேட்கிறார்கள் என்று யாரும் கூறவில்லையே?
நீதிபதி சிரித்துக்கொண்டே, ‘அப்படிக்கூட ஒரு பேச்சு வந்தது உண்டு’ என்றார். ஆனால், அப்படி நடக்கவில்லையே என்றார் வைகோ.
மேலும், கொசோவா தனிநாடு அமைவதற்கும், கிழக்குத் தைமூர் தனிநாடு அமைவதற்கும், பாலஸ்தீன விடுதலைக்கும் ஆதரவு கொடுப்பவர்கள், தமிழ் ஈழத்துக்கு மட்டும் ஏன் மறுக்கிறார்கள்? அந்த நியாயம் தமிழனுக்குக் கிடையாதா? என்று கேட்டார்.
நீதிபதி, ‘நீங்கள் இந்தத் தடையால் எப்படிப் பாதிக்கப்படுகிறீர்கள்?’
வைகோ: விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்து இருப்பதால், அவர்களது கொள்கையை ஆதரித்துப் பேசினால், அரசாங்கம் வழக்குப் போடுகிறது. இப்படிப் பேசியதற்காக, என்மீது இரண்டு தேசத்துரோக வழக்குகளை அரசு போட்டு இருக்கிறது. அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்திக்கிறேன். ‘விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவது தவறு இல்லை; அது குற்றம் ஆகாது’ என்று, நான் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
சிங்கள அரசு நடத்தும் இனப்படுகொலையால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி, தஞ்சம் நாடி, தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி, சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள். அல்லது, இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள். புலிகளின் மீதான தடையால், ஈழத்தமிழர்களுக்கு இப்படிப்பட்ட கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது. இந்தக் காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன்.
அரசாங்க வழக்கறிஞர், தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் செயல்படுவதாகச் சொன்னார். அது உண்மை அல்ல. இது அரசின் காவல்துறை ஜோடிக்கும் பொய் வழக்குகள் ஆகும். விடுதலைப்புலிகள் அமைப்பே இலங்கையில் ஒழிக்கப்பட்டு விட்டது என்று இந்திய அரசு கூறிவிட்டு, இந்தத் தடை ஆணைத் தகவலை அவர்களுக்குத் தெரிவிக்க, சட்டத்தில் கூறியபடி, எந்த நடைமுறைகளிலும், முயற்சிகளிலும் ஈடுபடாமல், இது விடுதலைப்புலிகளுக்கு என்று மொட்டையாக அரசு அறிவித்து உள்ளது. அது மட்டும் அல்ல, விடுதலைப்புலிகள், இந்திய அரசாங்கத்தைத் துரோகிகள் என்று குற்றம் சாட்டிப் பிரச்சாரம் செய்வதாக, இந்தத் தடை அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது. ஒருவகையில் இது உண்மைதான்.
நீதிபதி, இது யார் சொல்லுவது? என்றார்.
வைகோ, ‘நான் சொல்லுகிறேன்’ என்றதுடன், இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது என்று பிரதமருக்கு எழுத்து மூலமாகவே தந்து இருக்கிறேன். ஆங்கிலத்தில் நான் வெளியிட்ட புத்தகத்தையும் இங்கே தந்து இருக்கிறேன். 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில், ‘இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காக்க, இந்தியா இராணுவ உதவி செய்து இருக்கிறது’ என்று பிரதமர் எழுதி உள்ளார். உலகம் முழுமையும் இணைய தளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுவதாக, இந்த அரசு ஆணையில் குறிப்பிட்டு உள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் இது.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க, இந்தோனேஷியாவின் முன்னாள் அரசு வழக்கறிஞர் மார்க்சுசி தரிஸ்மான்,தெற்கு ஆப்பிரிக்காவின் யாஸ்மின் சுகா (மனித உரிமைப் போராளி) அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர் கொண்ட குழுவை நியமித்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர், ஐ.நா. பொதுச்செயலாளரை, ‘சர்வதேச விபச்சார புரோக்கர்’ என்று போர்டு எழுதி வைத்துப் போராட்டம் நடத்தினார்.
உடனே நீதிபதி, ‘வைகோ, இதைத் தாண்டி அரசியல் எல்லைக்குள் நீங்கள் போய்விட வேண்டாம்’ என்றார்.
உடனே அரசு வழக்கறிஞர் எழுந்து, ‘வைகோவும் முன்பு மத்திய அரசில் இடம் பெற்று இருந்தார். அப்போது, அவர் இதை எதிர்க்கவில்லை’ என்றார்.
வைகோ, ‘நான் தொடக்கத்தில் இருந்தே புலிகளை ஆதரித்து வருகிறேன். புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுவதற்குப் பிறகு ஏற்பட்டு உள்ள நிலைமை இது. நான் இதை அரசியல் மேடையாக ஆக்க விரும்பவில்லை’ என்றார். நீதிபதி, தமிழ்நாட்டு அரசு வழக்கறிஞரைப் பார்த்து, ‘நீங்களும் அரசியல் பேசாதீர்கள்’ என்றார்.
வைகோ: விடுதலைப்புலிகள் மீதான தடை, தமிழர்கள் அனைவருக்குமே துன்பம் விளைவிப்பதற்காகத்தான் அரசாங்கம் பயன்படுத்துகிறது. தடையை நீடிக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று நான் வேண்டுகிறேன்.
நீதிபதி, உங்கள் மனுவின் மீதான ஆணை பின்னர் பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
அதன்பிறகு, இந்த வழக்கின் அடுத்த விசாரணை, அக்டோபர் 5 ஆம் நாள் சென்னையிலும், அக்டோபர் 20 ஆம் நாள், உதகமண்டலத்திலும் நடைபெறும் என்று நீதிமன்றப் பதிவாளர் அறிவித்தார். மறுமலர்ச்சி தி.மு.கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், இந்த விசாரணையில், வைகோவுடன் கலந்து கொண்டார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
24.09.2010

தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் ‐ பெல்லன்வில விமலரதன தேரர்.
தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென பெல்லன்வில விமலரதன தேரர் சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
தமது தாய் மொழியை விரும்பியவாறு பயன்படுத்த முடியாது தமிழர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுடடி;க்காட்டியுள்ளார்.
பெல்லன்வில விமலரத்ன தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், பெல்லன்வில ரஜமஹா விஹாரையின் மாநாயக்கராகவும் கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொழிப் பிரச்சினைகளின் போது தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் கிட்டவில்லை என்பதனை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக குறித்த சர்வதேச ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது.
1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மொழியை அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்ற போதிலும், தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

24 செப்டம்பர் 2010
சிறைக்குள் செந்தமிழன் சீமான் எழுதும் திரைக்கதை.
இலங்கை கடற்படையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறையில் இருந்தபடியே மூன்று திட்டங்கள் தீட்டி அவற்றை சிறையில் இருந்து வெளியே வந்ததும் செயல்படுத்துவதற்கான பணிகளை துவங்கியுள்ளார்.
1.சிறைக்கு சென்றபிறகு ஈழப்போரில் திராவிட கட்சிகள் ஆரியருக்கு உதவி செய்ததன் மூலம் ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்தது என்று சிறையில் இருந்தபடி எழுதிவருகிறார்.
திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டு தொப்புள் குடி உறவான தமிழர்களை அழிக்க, மறைமுகமாக ஆரியர்களுக்கு செய்த உதவிகள் என்று அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புத்தகத்திற்கு ’ஆரியம் வெல்ல..திராவிடம் செய்த உதவி’ என்று தலைப்பிட்டுள்ளார். சிறையை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் இப்புத்தக வெளியீட்டு விழாவில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
2.விஜய்யை வைத்து இயக்கும் படம்சிறையில் தாணு தயாரிப்பில் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பகலவன் திரைப்படத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சிறைக்குள் பகலவன் படத்துக்கான திரைக்கதை எழுதி வருகிறார் சீமான். சிறையில் இருந்தபடியே தன்னுடையை இணை,துணை இயக்குநர்களை வரவழைத்து பட விசயமாக ஆலோசனை நடத்துகிறார்.
படத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவான கருத்துக்கள் அதிகம் இடம்பெறும்படி திரைக்கதையில் மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிகிறது.விடுதலையானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்.
3.கட்சியை பலப்படுத்த மாவட்டங்கள்தோறும் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்போகிறார் சீமான். வெளிநாடுகளில் உள்ள நாம் தமிழர் இயக்கத்திற்கும் நிர்வாகிகள் நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இதன் பின்னர் கட்சியின் மிகப்பெரிய மாநாடு ஒன்றை தமிழகத்தில் நடத்தவும், அம்மாநாட்டின் மூலம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் இயற்றவும் முடிவு செய்துள்ளார் சீமான்.
அதற்கான பணிகளை செய்யவும் கட்சி முக்கியஸ்தர்களிடம் ஆலோசனை கூறியுள்ளார் சீமான்.

புலிகள் என்ற குற்றச்சாட்டில் 17 பேர் தொடந்தும் விளக்க மறியலில்.
கொழும்பின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் 17 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டில் அவர்களை ஒக்ரோபர் 15 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கும்படி கொழும்பு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேடுதல் நடந்தபோது இந்த இளைஞர்கள் மறைந்திருந்ததாகக் கூறியுள்ள போலீசார், கொழும்பில் நாசகார வேலைகளைச் செய்யும் பொருட்டு இவர்கள் அண்மையில் கொழும்புக்குள் நுழைந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளது.
மான்னார் மற்றும் சிலாப கடற்கரையோரமாக நடந்த சில குறிப்பிட்ட செயற்பாடுகளில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதைத் தமது விசாரணைகள் மூலமாகத் தாம் கண்டறிந்துள்ளதாகவும் போலீஸ் தரப்புத் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர் படையெடுப்பு!
இந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் (ஒக்டோபர்) 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகி விட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், தாக்கப்படுவதும், சேதங்களை சந்திப்பதும் மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம், மகத்துவம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், அந்தோணி, சேசுராஜா, எமரிட், ஜான், தட்சிணாமூர்த்தி உட்படப் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைத் தமக்கு நிலைநாட்டித் தர வேண்டும் – எல்லை தாண்டிச் சென்ற 110 படகுகளுக்கு ‘நோட்டிஸ்’ வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் – இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி, எதிர்வரும் 11ஆந் திகதி ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் ஒன்று திரண்டு கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
23 செப்டம்பர் 2010
கனடா சிறைச்சாலை அதிர்ந்தது: குரல் எழுப்பி புதுவகைப் போராட்டம்!
கடந்த மாதம் சன் சீ கப்பம் மூலமாக சுமார் 490 தமிழர்கள் கனடா சென்றடைந்தனர். இலங்கை அரசின் தொடர்ச்சியான அழுத்தம், மற்றும் மாறிவரும் கனடா அரசின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக இவர்களை இன்னும் அடைத்துவைத்து விசாரித்து வருகிறது கனேடிய அரசு. இவ்வாறு அடைத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளில் குழந்தைகளையும் சிறுவர்களையும் உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் என பல மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் தொடர்ச்சியாக கனேடிய அரசைக் கோரிவருகின்றனர்.
இன் நிலையில் கனடா வன்கூவரில் இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமிற்கு வெளியே ஒரு புதுவகையான போராட்டம் இடம்பெற்றுள்ளது. கன்டிய மக்கள் சில ஒலிபெருக்கி மூலமாகவும், மற்றும் சத்தங்களை உருவாக்கும் ஊது குழல்களைக் கொண்டு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். எவ்வளவு பாரிய சத்தங்களை எழுப்ப முடியுமோ அவ்வளவு பெரிய சத்தங்களை அவர்கள் எழுப்பி, தமிழர்களை விடுதலைசெய்யக் கோரியுள்ளனர். இதனால் தடுப்பு முகாமே அதிர்ந்துள்ளதாக அறியப்படுகிறது.
அதிகாரிகளின் அன்றாட வேலைகள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும், அதேவேளை நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக என்று, அவர்கள் நடத்திய போராட்டத்தால் , எங்களுக்காக போராட சிலராவது உள்ளனர் என அகதிகள் நம்பிக்கை அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கனடாவில் தஞ்சம்கோரியுள்ள அகதிகளை திரும்ப நாடு கடத்தவேண்டும் என்ற அழுத்தங்கள் எழுந்துவரும் நிலையில், இவ்வாறான போராட்டங்கள் தமிழ் அகதிகளுக்கு நம்மிக்கை ஒளியை கொடுத்துள்ளது.

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்துக்கு முரணானது: ஐரோப்பிய நாடுகள்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள 18 ஆவது அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாகக் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 18ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு முரணானது என்று அங்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், அயர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே குறிப்பாக தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதேவேளை, 18ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனநாயக விரோத விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசின் சார்பில் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் விளக்கமளித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்றில் செய்தி வந்துள்ளது.
மேலும், மேற்படி கண்டனத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளியிட்டபோது, மாநாட்டில் எட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் பிரசன்னமாகியிருந்தார் என்றும் அறியப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக பிரதி சொலிஸ்டர் ஜெனரல்கள் இருவர் ஜெனிவாவுக்கு தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியை மீது இளைஞன் துப்பாக்கி சூடு – அம்பாறையில் சம்பவம்!
அம்பாறையில் சியம்பலாண்டுவ சிங்கள மகாவித்தியாலய ஆசிரியை ஒருவர்இன்று காலையில் கடமைக்காக பாடசாலை சென்ற போது இளைஞன் ஒருவன் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
அவ் ஆசிரியை மீது குறித்த பாடசாலையின் சிற்றுண்டி சாலையில் வேலை செய்த ஒருவரே துப்பாக்கியால் சுட்டதாகவும் ஆனால் ஆசிரியை காயங்களுடன் தப்பிவிட்டதாக தெரியவருகிறது.
ஆசிரியை மீது துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகதெரியவருகிறது
இந்த சூட்டுச் சம்பவத்தையடுத்து சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று மூடப்பட்டுள்ளது
காதலே இந்த சம்பவத்தின் பின்னனியென ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று அண்மையில் வவுனியா நகரசபை உத்தியோகஸ்தர் ஒருவரும் தன்னைத்தானே குடும்பப் பிரச்சினை காரணமாக சுட்டு க்கொண்டு தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கில் பலருக்கும் இராணுவத்தினர் முன்னர் தற்பாதுகாப்பிற்காக ஆயுதங்களை கொடுத்தனர். பின்னர் அதனை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

22 செப்டம்பர் 2010
மகிந்த சொல்ஹைம் மந்திர ஆலோசனை: முகமூடிகள் கிழிகின்றது!
சமாதானம் என்று கூறிக்கொண்டு 2002ம் ஆண்டு இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்தது நோர்வே. அதனை அவர்கள் ஏற்படுத்தினார்களோ இல்லையோ, குறைந்தபட்சம் இலங்கையில் நடந்த மனிதப் படுகொலைகளையோ, இல்லை இன அழிப்பையோ இவர்களால் நிறுத்த முடியவில்லை என்பதை எல்லோரும் நன்கு அறிவர். அடிக்கடி இலங்கை சென்று ஜனாதிபதி உட்பட, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களையும் அடிக்கடி சந்தித்துவந்த நபர் எரிக் சொல்ஹைம். சமாதானத் தூதுவராக இவர் செயல்பட்ட காலம்போய் தற்போது இலங்கை அரசின் பக்கம் சாய்ந்து பக்கசார்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் என்பது பழைய கதை. ஆனால் புதிய கதைகளும் அரங்கேறியுள்ளது.
நேற்றைய தினம நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மகிந்தவை இவர் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். அப்போது தான் நோர்வேயில் உள்ள பல தமிழர்களோடு பேசியிருப்பதாகவும், அதில் பெரும்பான்மையான தமிழர்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கவே விரும்புவதாக, மகிந்தவுக்கு இவர் எடுத்துரைத்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சுமார் 12,000 த்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் நோர்வே நாட்டில் வசித்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழீழ மக்களவைக்கும், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கும், தற்போது நடைபெற்ற நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமது வாக்குகளை போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை மீண்டும் வலுயுறுத்திக் காட்டியிருந்தனர். இது உலகறிந்த விடயம்.
ஆனால் எரிக் சொல்ஹைமின் காலைப் பிடித்து திரியும் சில அடிவருடிகள் சொல்வதை கேட்டும், மற்றும் குறிப்பிட்ட சிலரோடு மட்டும் பேசிவிட்டு, ஏதோ நோர்வேயில் உள்ள மொத்தத் தமிழர்களும் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்க இருப்பதாக எரிக் சொல்ஹைம் கூறியிருப்பது அடிமுட்டாள் தனமாகும். தமிழ் மக்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை நோர்வே தமிழர்கள் பல முறை நிரூபித்துவிட்டனர். அதிலும் மக்களவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடு கடந்த தமிழீழ அரசு, என பல கட்டமைப்புகள் அங்கு இயங்கிவரும் நிலையில், தமிழர்களின் ஏகோபித்த அபிலாஷை இது தான் என்று கூற எரிக் சொல்ஹைம் யார்?
வெறுமனவே மகிந்தவை திருப்திப்படுத்த இவர்கள் போன்ற பச்சோந்திகள் முனைகிறார்களே அன்றி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இவர்கள் இன்னும் செயல்படவில்லை. 18 வது திருத்தச் சட்டத்தை உலகில் உள்ள பல ஜனநாயக அமைப்புகள் எதிர்த்துள்ளன, நீதித் துறை, தேர்தல் ஆணையாளரை நியமிப்பது, போலீஸ் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியைக் கட்டுப்படுத்தும் சில மேலதிக அதிகாரங்களும் தற்போது இச் சீர்திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கைகளில் விழுந்துள்ளன. இது குறித்தோ இல்லை மனிதப் படுகொலை குறித்தோ ஆராயாத எரிக் சொல்ஹைம், நோர்வே தமிழர்கள் உங்களுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள் என மகிந்தவிடம் அசடு வழிந்துள்ளார். இதனை மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதும் இல்லை.
எனவே எரிக் சொல்ஹைமுடன் இணைந்து செயல்படுவோரை நாம் முதலில் இனம்காண வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்களே எமது பாதையை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்ல திட்டங்களைத் தீட்டிவருகின்றனர்.
அதிர்வின் ஆசிரியபீடம்!

நன்றி:அதிர்வு.கொம்
கனடா செல்லும் ஏதிலிகளை கனடா இனி ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலை பயன் படுத்தி வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழ் ஏதிலிகளுக்கு கனேடிய அரசு இப்போது பச்சைக் கொடி காட்டியுள்ளது.
கனடாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டாம் என முன்வைக்கப்பட்ட திட்டத்தை கனடா அரசாங்கம் நிராகரித்துள்ளது
குடியுரிமையை வழங்குதல் அல்லது அவர்கள் திருப்பியனுப்புவதல் அல்லது அவர்களை தடுத்து வைத்தல் தொடர்பாக கவனம் செலுத்துவதை விட்டுவட வேண்டும் என கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் இருந்தோ அல்லது வேறு எந்த நாட்டில் இருந்தோ கனடாவிற்கு அகதிகள் வருவதை தடுக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாபரே தெரிவித்தார்.

21 செப்டம்பர் 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகள்! ஜெர்மனியின் மத்திய தொகுதியின் உத்தியோகப்பூர்வமான முடிவுகள் அறிவிப்பு!!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெர்மன் மத்திய தேர்தல் தொகுதியின் பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை ஜெர்மன் தேர்தல் ஆணையகம் இன்று (செற்டெம்பர் 21) அறிவித்துள்ளது.
1. திரு. கிரேத்தியன் ஜேம்ஸ் அல்ஸ்ரன்
4. திரு. சுப்பிரமணியம் பரமானந்தன்
5. செல்வி. தனிகா சுப்பிரமணியம்
ஆகியோர் தாமாக முன்வந்து இத் தேர்தலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததின் பேரில் பின்வரும் நால்வரும்
2. கணேசரட்னம் சந்திரபாலன்
3. திரு. இந்திரலிங்கம் முகுந்தன்
6. திரு. இராசையா தனபாலசிங்கம்
7. திரு. நடராஜா திருச்செல்வம்
ஜெர்மன் மத்திய தேர்தல் தொகுதி 3இல்; மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் இத்தால் அறியத்தருகின்றோம்.
செயலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

கூரை மீதேறி போராட்டம் முடிவுக்கு வந்தது!
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து, நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள சுமார் 8 தமிழர்கள் உட்பட, ஒரு ஈரான் நாட்டவரும் சேர்ந்து, சிறைச்சாலையின் கூரையில் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை ஃபிஜி நாட்டுப் பிரஜை ஒருவர் ஏற்கனவே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து சிறைச்சாலையை சுற்றி அவரது ஆதரவாளர்களும், மனித உரிமை அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கை அகதிகளும் தம்மை திருப்பி அனுப்பவேண்டாம் எனக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் கூரையில் இருந்து தாம் குதிக்கப்போவதாகக் கூறியதை அடுத்து நிலத்தில் மெத்தைகளையும், விழுந்தால் அடிபடாமல் இருக்கும் வகையிலான் பிளாஸ்டிக் வலைப்பின்னல்களும் போடப்பட்டிருந்தது. இருப்பினும் இன்றுடன், இப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அவுஸ்திரேலிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கூரையில் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்திய அனைவரும் கீழே இறங்கியுள்ள நிலையில் ஒருவர் மட்டும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. அவரை சக கைதிகள் மடக்கிப்பிடித்து பலவந்தமாக கீழே இறக்கியுள்ளனர்.
ஏற்கனவே குதித்து தற்கொலை செய்துகொண்ட ஃபிஜி நாட்டவர், கூரையில் ஏறி நின்றவேளை குதித்துப் பார், அல்லது உன்னால் குதிக்க முடியுமா என்று, அவுஸ்திரேலியப் பொலிசார் அவரை கிண்டல் செய்து, அவரை வெறுப்பேற்றியே குதிக்க வைத்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவுஸ்திரேலியப் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வைக்கோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்.
''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட் டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது!
காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்!
''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.
''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.
இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.
''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார்.
பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....
''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!

ஆஸி.சிறையில் கூரை மேல் போராட்டம் ! ஈழத் தமிழர்கள் ஒன்பது பேர் தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 07 பேர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Villawood தடுப்பு முகாமின் கூரையில் ஏறி நின்று இன்று தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்களுடன் ஆப்கானியர் ஒருவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸி அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்று இவர்கள் மிரட்டுகின்றார்கள்.
பீஜி நாட்டவர் ஒருவர் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இக்கூரையில் இருந்து காலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸியின் Villawood தடுப்பு முகாம் கைதிகளான சட்டவிரோத குடியேற்றவாசிகளில் சிலர் இன்று முகாமின் கூரையில் ஏறி நின்று தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் செய்கின்றமையால் அங்கு பாரிய பதற்றம் நிலவுகின்றது.
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு கடத்தப்படுகின்றமையை ஆட்சேபித்தே இவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸ்திரேலிய அரசு வாபஸ் பெறா விட்டால் கீழே குதித்துத் தற்கொலை செய்வார்கள் என்றும் மிரட்டுகின்றார்கள்.
பிஜி நாட்டவர் ஒருவர் அதிகாலையில் கூரையில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இவ்வார்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருப்போரில் ஒன்பது பேர் வரையானோர் இலங்கைத் தமிழர்கள் என்றும் ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இரவிலும் போராட்டம் தொடரும் என்று இவர்கள் அறிவித்துள்ளார்கள். இவர்களை கீழே இறக்குகின்றமைக்கு பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுடன் பேச்சு நடத்த இலங்கையர் ஒருவர் ஆஸி அதிகாரிகளால் கூரைக்கு தூது அனுப்பப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூரையை விட்டு இறங்கி வந்த பின் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம் என்பது அதிகாரிகளின் நிலைப்பாடாக உள்ளது.

20 செப்டம்பர் 2010
ஜேர்மன் வைத்தியசாலையில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!
ஜேர்மன் வைத்தியசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டும் ஒருவர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பிரெஞ்ச், சுவிஸ் எல்லைக்கு அண்மையாகவுள்ள லொவெரச் தென் மேற்கு நகரில் நடந்துள்ளது. அங்குள்ள செயிண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குள் நடந்து சென்ற பெண்ணொருவர் தாம் கொண்டுசென்ற தானியங்கித் துப்பாக்கி மூலம் சுட்டுள்ளார். இறந்தவர்களில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. 15 நிமிடங்களுக்குள் அப்பகுதியை அடைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். ஆனால் குறித்த பெண்மணி எவ்வளவு நேரமாக அம்மருத்துவமனை வளாகத்தில் இருந்தார் என்பது இன்னும் தெரியவில்லை.
இதேவேளை குறித்த மருத்துவமனைக்கு எதிராக நடந்த குண்டுவெடிப்பொன்றைப் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்கு இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா எனப் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

16 பஸ்களில் போராளிகளை முள்ளிவாய்க்காலில் வைத்து ஏற்றி சென்றனர்.
வன்னியில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மற்றும் பிடிபட்ட போராளிகளையும் ஏற்றி 16 பஸ்களில் கொண்டு சென் றார்கள். இன்றுவரை அவர்களின் கதி என்ன வென்று தெரியாது. இவ்வாறு முன்னாள் போராளி ஒருவரின் தாயார் நல்லிணக்க ஆணைக்குழுமுன் நேற்று சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நேற்று நடத்திய அமர்வில் சாட்சியம் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போராளிகளை விடுவிக்க பணம் கேட்ட இராணுவம்
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து முதலில் சரணடைந்த போராளி ஒருவரே எமது பிள்ளைகளைக் காட்டிக்கொடுத்தார். எமது பிள்ளைகள் வலுக்கட்டாயமாகவே விடுதலைப்புலிகளினால் அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து தப்பிவந்து இறுதி யுத்தத்தின்போது இராணுவப் பகுதிகளை நோக்கிச்சென்றபோது இராணுவத் தரப்புடன் நின்றிருந்த குறித்த போராளி எமது பிள்ளைகளை இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தார். இராணுவம் எமது பிள்ளைகளைப் பிடிக்கும் போது பணம் தந்தால் விட்டுவிடுவதாகக் கூறினார்கள். நாங்கள் இரண்டு லட்சம் ரூபாவைக் கட்டினோம். தாங்கள் எமது பிள்ளைகளை விசாரணையின் பின் மூன்று நாள்களில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்கள்.
இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் ஒரு கூடாரம் போன்ற அறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதனுள் சென்று பார்க்க எமக்கு அனுமதி தரப்படவில்லை. சரணடைபவர்களை மூன்று நாள்களில் விடுவிப்பதாக படையினர் அறிவித்ததை அடுத்து ஜோசப் பிரான்லின், ரெஜினோல்ட் ஆகிய பங்குத்தந்தையர் அவர்களிடம் பெற்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் போராளிகள் பலரும் கையளிக்கப்பட்டார்கள்.
அவ்வாறு கையளிக்கப்பட்டவர்கள் 16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதுவரை அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்றுகூடத் தெரியாத நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.
எமது சொத்துக்கள் யுத்தத்தில் அழிவடைந்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் அவர்களுடன் மரநிழலின் கீழாவது சந்தோசமாக வாழ்வோம் அவர்களை எவ்வளவு கஸ்டத்தின் மத்தியில் வளர்த்தோம் என்பது எமக்குத்தான் தெரியும். இந்த வயதிலும் (வயது 53) நாம் உழைத்துக் கஷ்டப்படுகிறோம். எமது பிள்ளைகள் இருந்திருந்தால் இந்த நிலைமை எமக்குத் தோன்றியிராது என்றார்.

19 செப்டம்பர் 2010
சிறையிலுள்ள தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகளை நசித்துச் சித்திரவதை!
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சிறையிலுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைத் தொடர்ந்தும் சித்திரவதை செய்து வருவதாக தனது பெயரை வெளிவிட விரும்பாத ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதான இளைஞர்களைச் சந்தித்தபோதே தமக்கு இவை தெரியவந்ததாக அவர் கூறினார். வேலைவாய்ப்பின் நிமித்தம் கொழும்பிலும் அதன் புறநகரிலும் தங்கியிருந்த தமிழ் இளைஞர்கள் தவிர வடக்குக் கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதான இளைஞர்களும்கூட கொழும்பு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திலும் பூசா முகாமிலும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, வெலிகந்தை ஆகிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலிகளை மேலதிக விசாரணைகள் என்ற பெயரில் கொழும்புக்குக் கொண்டுவந்து அங்கு பல சித்திரவதைகளைச் செய்துவருகிறார்கள் போலீசார். மேலும், தாம் தயாரித்துள்ள அறிக்கைகளில் மேற்படி இளைஞர்கள் கையெழுத்துப் போட மறுத்தால் அவர்களது வாழ்நாள் முழுவதையும் அச்சிறைகளிலேயே கழிக்க வேண்டிவரும் என்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
இரும்புக்கம்பிகள், கிரிக்கெட் மட்டைகள், குண்டாந்தடிகள் ஆகியவற்றால் இவ்விளைஞர்களைத் தாக்கிவரும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அவ்விளைஞர்களின் அந்தரங்க உறுப்புகளையும் நசித்துச் சித்திரவதை செய்கின்றனர். அதோடு தாம் சித்திரவதை செய்து கொலைசெய்த இளைஞர்களை வீடியோ எடுத்து அவற்றை அங்குள்ள இளைஞர்களுக்குக் காண்பித்தும் அச்சுறுத்தி வருவதாக மேற்படி ஊடகவியலாளர் கூறியுள்ளமை எங்கள் உடலையே அச்சத்தில் உறைய வைக்கிறது.
இவ்விளைஞர்களைப் பார்வையிட வருகின்ற உறவினர்களும் வெளியில் சொல்ல முடியாத பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தமது பிள்ளைகள், சகோதரர்களுடன் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வெளியிலிருந்து வரும் உணவுகளைத் தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு கொடுக்க அனுமதிக்காத சிறை அதிகாரிகள், தம்மால் நடத்தப்படும் உணவகத்தில் மட்டுமே உணவை வாங்கும்படியும் கட்டாயப்படுத்துகின்றனர்.
மேலும், தமது உறவுகளைப் பார்க்கவரும் உறவுகளிடமிருந்து பணம் கறந்துவருவதாக முஸ்லிம் அதிகாரியான அப்தீன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள வேளை, மொகமட் எனப்படும் முஸ்லிம் அதிகாரி இனத்துவேசமாக அங்குள்ள தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்வதாகவும் கூறப்படுகிறது.
தடுப்புக் காவலில் உள்ள இளைஞர்களுக்கு போதிய மருத்துவ வசதி, சுகாதார வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு மூன்று கழிப்பறைகள் மட்டுமே அங்குள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக தண்ணீர் செலவழிப்பவர்களுக்கும் சித்திரவதை நடப்பதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.

தமிழன் மானத்தை விற்றுப்பிழைக்கும் பலருக்கு மத்தியில் இப்படியும் ஒரு வீரத்தாய்!
விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனைத் தேடி ஒப்படைக்குமாறு அவரது மனைவி ஆனந்தி சசிதரன் நேற்றையதினம் கிளிநொச்சியில் கூடிய நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரசன்னமாகி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் பி.பி.சி தமிழோசைக்கு கொடுத்த ஒலிவடிவிலான பேட்டியின் தொகுப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அரசியல் துறை துணைபொறுப்பாளர் தங்கன், நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பூவண்ணன், மற்றும் பிரியன், உட்பட பலர் அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாரோடு சென்று சரணடைந்த்தாகவும், அதனைத் தான் நேரடியாகப் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் 9 பேர்கொண்ட தூதுக்குழு இலங்கை சென்று கே.பியைச் சந்தித்தவேளை, இலங்கை புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கபில ஹெதவிதாரணவிடம், நிர்வாகசேவைப் பொறுப்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அப்படி தங்களிடம் யாரும் இல்லை என அவர் பதிலளித்ததோடு, இராணுவத்திடம் சரணடைவதை யாராவது பார்த்தார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். பொதுவாக புலிகளின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பலர் சரணடையும்போது, பலரின் மனைவிமார்களும் கூடவே இருந்திருக்கின்றனர். அவர்களே அதற்கு சாட்சியாகும்!
பணத்துக்காகவும், பதவி, அந்தஸ்துக்காகவும், அரசுடன் கூடித் திரியும் பலர் இருக்கும்போது, இன்னும் மாறாமல் ஈழத்தில் இருக்கும் ஒரு மறத் தமிழச்சியின் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதுவும் ஈழத்து தமிழர்களின் உள் உணர்வு என்ன என்பதை உலகுக்கு உணர்த்தி நிற்கிறது.

மகிந்தவிற்கு சவாலான செயல்திட்டத்தை கட்சி செயற்குழுவில் சமர்ப்பிக்குமாறு ரணில் கோரிக்கை.
கட்சியின் பதவிகளுக்காக முரண்பட்டு கட்சியை பிளவுபடுத்தாது மகிந்த ராஜபக்சே வின் சர்வாதிகார நிர்வாகத்தை கவிழ்ப்பதற்காக நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத் திட்டமொன்றை செயற்குழுவில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் அதிருப்தி குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்மறுசீரமைப்பைக் கோரி நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் யோசனைகளுடன் நேற்று (17) தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்டி சில்வாவிடம் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்
பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துச் செயற்படும் சிலர் கடந்த காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே விற்கோ அல்லது அவரது குடும்ப நிர்வாகத்திற்கு எதிராகவோ பகிரங்கமாக எவ்வித வார்த்தைகளைக்கூட வெளியிடவில்லை என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

18 செப்டம்பர் 2010
சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது - ச. வி. கிருபாகரன்.
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு ச. வி. கிருபாகரன் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 15வது கூட்டத் தொடர் இந்தவாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் ஐ. நா. விற்கான தாய்லந்து தூதுவர் தலைமையில் நடைபெறுகிறது.
கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில், பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் அங்கத்தவரும், பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளருமான திரு ச. வி. கிருபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் நிலைபற்றி எடுத்துரைத்தார். தமிழீழ மக்களுக்கு எந்தவித புனர்வாழ்வு, புனரமைப்பு திட்டங்களை வழங்காத இலங்கை அரசு, சர்வதேச ரீதியாக முழுப் பொய்களைக் கூறிவருகிறது. இப் பொய்களை நம்புவதற்கும் பல தனிநபர்களும், நாடுகளும் உண்டு. காரணம் அவ் நாடுகளும், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு செய்யும் அநியாயங்கள் போன்றே, தமது நாடுகளில் வேறு இனங்களுக்கு செய்கின்றனர்; என்று வி. கிருபாகரன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் பி.பி.சி யினருக்குத் தடை!
கடந்த ஆண்டு நிறைவடைந்த போரின்போதான போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை இன்று கிளிநொச்சியில் நடைபெறுகின்றது. மூன்று நாட்கள் நடக்கவுள்ள இவ்விசாரணையில், பொதுமக்கள் தமது சாட்சியங்களை அளிக்கவுள்ளனர். இனியும் ஒரு போராட்டம் வெடிப்பதைத் தடுக்கும் விதமாக இவ்வாணைக்குழு பாடுபட்டு வருவதாக அரசு கூறிவருகிறது.
ஆனால் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் இவ்விசாரணையில் பொதுமக்கள் எவ்வாறான சாட்சியங்களை அளிக்கிறார்கள் என்பது குறித்துச் செய்திகளை சேகரிப்பதற்கு பி.பி.சி செய்திசேவையை அனுமதிக்க முடியாது என்று சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்றுமுதல் நடக்கும் இவ்விசாரணைகளில், போரினால் நேரடியாகப் பாதிப்புகளுக்கு உள்ளான பொதுமக்கள் சாட்சியங்களை அளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க பாதுகாப்பு அமைச்சு தடையை விதித்துள்ளது.
இவ்வாணைக்குழு முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளதோடு, இறுதிக்கட்ட போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விசாரணைகளில் பெரும்பாலானவை வெளிப்படையாகவே நடக்கவுள்ளதாகவும் கூறப்ப்படுகிறது. ஆனால் எதற்காக பி.பி.சி க்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதை இராணுவ தொடர்பாடல் அதிகாரி தெரிவிக்கவில்லை.
வெளிப்படையான விசாரணைகளை நடத்தவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தே இவ்வாணைக்குழுவை மஹிந்த நியமித்திருந்தார். ஆனால் இதில் ஊடகவியலாளர்கள் பங்குபற்றக்கூடாது என்றால் இவ்விசாரணையின் உண்மைத்தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் ஊகித்து விளங்கிக்கொள்ள முடியும்.

கரடியனாறு வெடிப்பில் காயமுற்ற மேலுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!
நேற்று நடைபெற்ற கரடியனாறு வெடிச்சம்பவத்தில் காயமுற்று இருந்து 22 பொலிஸாரில் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மு.ப.11.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் காயமுற்ற 44 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 4 பேர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 28 வயது உடைய பொலிஸ் கான்ஸ்டபிள் குமார, அதிதீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7.30 க்கு உயிரிழந்தார்.

17 செப்டம்பர் 2010
மட்டக்களப்பில் சீன கண்டேனர் வெடித்தது: இந்திய ரோ அதிகாரிகள் காரணமா?
இலங்கையில் சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் பல இடம்பெற்று வருகின்றது யாவரும் அறிந்ததே. சீனாவின் அபிவிருத்தி திட்டத்திற்காக கல் உடைப்பதற்கு பல டைனமைட் வெடிபெருட்கள் ஒரு பாரிய கொள்கலனில் கொண்டுவரப்பட்டு, அது கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து வேறு ஒரு பாரஊர்திக்கு மாற்றப்பட்டுக்கொண்டு இருந்தவேளையே இக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அதிர்வின் மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார். இதில் வெடிபொருட்களை மாற்ற முனைந்த 2 சீனர்கள் உட்பட சுமார் 60 பொலிசார் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் கரடியனாறு போலீஸ் நிலையம் முற்றாக இடிந்து தரைமட்டமாகியுள்ளது.
மேலும் 60 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்த டைனமைட் குண்டுகள் சி 4 வகை அல்ல அது இலகுவில் வெடிக்க. அவை பற்றவைத்தாலே வெடிக்கும். இந்நிலையில் இக் குண்டுவெடிப்புக்கும் இந்தியாவின் உளவுத்துறைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என அறியப்படுகிறது. இலங்கையில் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் மிக ஆபத்தானவை எனக் காட்டவே இவ்வாறு ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அத்தோடு சில தினங்களுக்கு முன்னர் 2 இந்திய ரோ அதிகாரிகளை இலங்கை நாடு கடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவரும் நிலையில், சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தவிடுபொடியாக்கவும், அதன் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கவும், மற்றும் போர் ஓய்ந்துள்ள நிலையில் சுமார் 60 பொலிசார் மரணமடைந்திருப்பதும் பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். சிங்கள மக்கள் சீனாமேல் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்துள்ளனர் இந்திய ரோ பிரிவினர். சீனாவில் இருந்து கண்டெய்னரில் கொண்டுவரப்பட்ட இந்த பாறைகளை உடைக்கும் டைனமைட்டுக்கள் ஏன் பொலீஸ் நிலையம் முன்பாக நிறுத்தப்படவேண்டும்?
அதற்கு முரணாக இலங்கை இராணுவம் மட்டக்களப்பு பொலீஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்திலேயே குண்டுவெடித்தது என முதலில் சிங்கள செய்திச் சேவைகளுக்கு தெரிவித்துள்ளது. இதில் பல முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே இது தான் ஆரம்பம் என்பது போல பிரித்தானியாவில், பல குறும் தகவல்கள்(SMS) உலாவுகின்ற. இத் தாக்குதலை விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் ராம் செய்ததாகவும் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனை!
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட முறைகேடுகள் தொரடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்நீதிமன்றம் இன்று மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

கரடியனாறு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் படையினர் விசாரணை!
மட்டக்களப்பு கரடியனாற்றில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசேட படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.அரசியல் காரணமாகவோ அல்லது நாசகார வேலை காரணமாகவோ இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதை தாம் முற்றாக நிராகரிகரிக்கிறோம். படையினர் விசாரணைகளில் ஈடுப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க பகுப்பாய்வாளர்களை உள்ளடக்கிய விசேட குழுவினர், கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ன செல்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருப்பதால் பதில் பாதுகாப்பு அமைச்சராக டி.எம்.ஜயரட்ன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீன நிறுவனமொன்றிற்குச் சொந்தமான வெடிபொருள்கள் நிரப்பிய 3 கொள்கலன்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.
முதலில் ஒரு கொள்கலனிலிருந்து வெடிபொருள்களை இறக்கியபோது ஏற்பட்ட வெடிப்பையடுத்து ஏனைய கொள்கலன்களும் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

16 செப்டம்பர் 2010
வரலாறு காணாத கத்தோலிக்கர் கூட்டத்தில் சிவந்தன் துண்டுப்பிரசுரம்: காணொளி!
போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் இன்று மதியம் ஸ்காட்லாந்தில் முதல் முறையாக காலடி எடுத்துவைத்துள்ளார். பிரித்தானியா முழுவதும் சுமார் 6 மில்லியன் ரோமன் கத்தோலிக்க இனத்தவர் வாழ்கின்றபோதும், ஸ்காட்லாந்தில் அவர்களில் பெரும் தொகையானோர் வசித்து வருகின்றனர். மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெறும் இந்நிகழ்வில் போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள் மக்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெறும் இவ்வேளையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இதில் கலந்து கொண்டுள்ள நிலையில் அங்கே சிவந்தன் துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்கிறார்.
ஈழத்திலும், இலங்கையின் தென்பகுதியிலும் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்களுக்காவும், அங்கு இராணுவத்தினரால் நிர்மூலமாக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பாக நீதிகேட்டும் இத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன். பல கத்தோலிக்கர்கள் தமது இனத்தவர் இலங்கையில் கொல்லப்பட்டது தொடர்பாகவும், தமது தேவாலயங்கள் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் விழிப்படைந்துள்ளனர். கவலையுற்ற பல கத்தோலிக்கர்கள் இலங்கை நிலைகுறித்து கேட்டறிந்ததாக உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் தெரிவித்தார்.
பி.பி.சி நிருபர்கள் உட்பட பலர் துண்டுப் பிரசுரங்களை தாமாகவே கேட்டு வாங்கிச் சென்றதாக பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை சிவந்தன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் இணைந்து மக்களுக்கு வழங்கி நீதிகேட்டு இருந்தது இலங்கையில் தமிழர்களுக்கு நீதிவேண்டும் என்ற கோட்பாட்டிற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்ததை இங்கு காணக்கூடியதாக இருந்தது.
ஜகத் டயஸ் மீதான வழக்கு ஆராய்வு!
சிறீலங்கா இராணுவத்தின் 57 ஆவது படையணியின் முன்னாள் கட்டனை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் இன் ஜேர்மன் பிரதித் தூதுவர் பதவிக்கு எதிராக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்ட வழக்கு விசாரணைகளை ஐரோப்பிய நீதிமன்றம் ஆராய்ந்துவருவதாக அதன் பதிவாளர் முல்லர் எல்ஸ்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் அதிகளவு மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட டயஸ் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் சுவிஸ் ஈழத்தமிழர் சபை, நோர்வே ஈழத்தமிழர் சபை, அமெரிக்காவை தளமாக கொண்ட இனஅழிப்புக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன கடந்த ஜுலை மாதம் வழக்குகளை பதிவு செய்திருந்தன.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரியை அனுமதித்ததன் மூலம் ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை மீறிவிட்டது என அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் நாம் ஆராய்துவருவதாகவும், விசாரணைகள் ஆரம்பமாகும்போது அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமது முறைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கான கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சுவிஸ் ஈழத்தமிழர் சபையை சேர்ந்த அருள்நிதிலா தெய்வேந்திரன் தெரிவித்துள்ளர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)